4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

263
Image courtesy - AFP

ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார்.

ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும் ஐரோப்பிய விளையாட்டு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் சங்கங்களினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற இவ்விருது வழங்கும் விழா நேற்று (24) பார்சிலோனாவில் நடைபெற்றது.

2017ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தெரிவு

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை நட்சத்திர கால்பந்து வீரரான…

2016ஆம் மற்றும் 2017ஆம் பருவகாலத்தில் லாலிகா உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய கால்பந்து போட்டித் தொடர்களிலும் 37 கோல்களைப் பெற்று திறமைகளை வெளிப்படுத்திய மெஸ்ஸிக்கு இம்முறை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதை கடந்த வருடம் பெற்றுக்கொண்ட மெஸ்ஸியின் பார்சிலோனா அணியின் மற்றொரு முன்கள வீரரும், அவரது நண்பருமான லூவிஸ் சுவாரஸ் இம்முறை வெற்றியாளராகத் தெரிவான மெஸ்ஸிக்கு வழங்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக 2010(34 கோல்கள்), 2012(50 கோல்கள்) மற்றும் 2013ஆம்(46 கோல்கள்) ஆண்டுகளில் இவ்விருதை தட்டிச்சென்ற 30 வயதான மெஸ்ஸி, 4 வருடங்களுக்குப் பிறகு இவ்விருதை மீண்டும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நெதர்லாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போது போர்த்துக்கல்லின் ஸ்போர்டிங் சிபி கழகத்துக்காக விளையாடி வருகின்ற 31 வயதான பாஸ் டொஸ்ட், கடந்த பருவகாலத்தில் 34 கோல்களைப் பெற்று 2ஆவது இடத்தையும், ஜேர்மனியின் புரூஷியா டோர்ட்மெண்ட் கழகத்துக்காக விளையாடிவருகின்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயதான பியர்எமெரிக்பமியாங் 31 கோல்களைப் பெற்று 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Sporting’s Dutch forward Bas Dost celebrates after scoring a goal during the Portuguese league football match Sporting CP vs Vitoria FC – courtsey – Getty Images

குறித்த விருதைப் பெற்ற பிறகு மெஸ்ஸி கருத்து வெளியிடுகையில், எனது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பார்சிலோனா அணி வீரர்களுக்கும், முகாமைத்துவத்துக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தொழில்முறை கால்பந்து விளையாட்டின் முதல் அணியான பார்சிலோனாவுக்காக நான் கடந்த 13 வருடங்களாக விளையாடி வருகின்றேன்.

நான் ஒருபோதும் முன்கள வீரராக மாத்திரம் விளையாடவில்லை. அணியின் வெற்றிக்காக கோல்களைப் பெற்றுக்கொள்வதில் தான் நான் எப்போதும் கவனம் செலுத்துவேன். எனவே அந்த இலக்கை அடைவதற்கான அதிஷ்டமும் எனக்கு இருந்தது. என்னிடம் உள்ள திறமைகளை வளர்த்துக் கொள்ள நான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பார்சிலோனாவுக்காக விளையாடுவேன்” எனத் தெரிவித்தார்.

பிரேசிலின் நட்சத்திரக் கால்பந்து வீரருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA) தரவரிசையில்… இந்நிலையில் , மேன்முறையீட்டு…

இந்நிலையில், கடந்த வருடம் ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்ட ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இவ்விருதை 4 தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த, 2008, 2011, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அவர் இந்த விருதினை பெற்றுக்கொண்டார். எனினும், இப்பருவத்தில் லாலிகா தொடரில் விளையாடிய ரொனால்டோ, 25 கோல்களைப் மாத்திரம் பெற்றுக்கொண்டதால் குறித்த விருதுக்கான முதல் 5 வீரர்களுக்கான பட்டியலில் அவரால் இடம்பெறமுடியாமல் போனது.

இதேவேளை, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை கடந்த 9 வருடங்களில் மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் சுவாரஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும் ஒரேயொரு தடவை மாத்திரம் குறித்த விருதை (கடந்த 2013 – 2014 பருவகாலத்துக்காக) ரொனால்டோ மற்றும் சுவாரஸ் ஆகியோர் தமக்கிடையே பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.