புதிய T20 வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்டிய குயின்டன் டி கொக்

188
 

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக வெளியிட்டுள்ள T20 வீரர்கள் தரவரிசையில், நடைபெற்று முடிந்த இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான T20 தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்கள் முன்னேற்றம் காட்டியிருக்கின்றனர்.

“துடுப்பாட்ட வீரர்கள் தமது பணிகளை சரியாக செயற்படுத்தவேண்டும்” – ஷானக

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான T20 தொடரில் அதிக ஓட்டங்களை (153) குவித்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரரான குயின்டன் டி கொக், தனது அபார ஆட்டத்திற்காக T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் தற்போது நான்கு இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

அதேநேரம், குறித்த T20 தொடரில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஏனைய தென்னாபிரிக்க அணி வீரரான எய்டன் மார்க்ரம், பன்னிரண்டு இடங்கள் முன்னேறி தற்போது T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் 11ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மறுமுனையில், மற்றுமொரு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான ரீசா ஹென்ரிக்ஸ் உம் T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்டி முதல் 20 இடங்களுக்குள் வந்திருக்கின்றார்.

இலங்கை அணி சார்பில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 தொடர் துடுப்பாட்டத்தில் சற்று சிறப்பாக செயற்பட்டிருந்த குசல் ஜனித் பெரேராவும், T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் தற்போது முன்னேற்றம் காட்டியிருக்கின்றார். அந்தவகையில், தற்போது 10 இடங்கள் முன்னேறியிருக்கும் அவர் 39ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், புதிய T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் டாவிட் மலான் 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்பட, பாகிஸ்தானின் பாபர் அசாம், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் காணப்படுகின்றனர்.

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் ஏழு இலங்கை வீரர்கள்

பந்துவீச்சினை பொறுத்தவரையில், தென்னாபிரிக்க மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான தப்ரைஸ் சம்ஷி 775 புள்ளிகளுடன் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்தும் நீடிக்க, முன்னர் 764 புள்ளிகளுடன் காணப்பட்ட இலங்கையின் வனிந்து ஹஸரங்க தற்போது  747 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றார். T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், மூன்றாம் இடத்தில் ஆப்கானிஸ்தனின் ரஷீட் கான் 719 புள்ளிகளுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

புதிய T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசை

புதிய T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…