விறுவிறுப்பாக நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021 T20 தொடரின் 07ஆவது போட்டியில் கண்டி வொரியர்ஸ் அணிக்கு எதிராக, ஜப்னா கிங்ஸ் டக்வெத் லூயிஸ் முறையில் 14 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இந்தப்போட்டி கடின மழையின் குறுக்கீடு காரணமாக அணிக்கு 14 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
சோல்ட், தரிந்து மற்றும் ஷட்ரானின் பிரகாசிப்புடன் ஜயண்ட்ஸ் அணிக்கு 2வது வெற்றி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, ஜப்னா கிங்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி அதன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும், குறுகிய ஓட்ட இடைவேளை ஒன்றில் பறிகொடுத்த போதும், அதன் மூன்றாம் விக்கெட்டுக்காக அதிரடி இணைப்பாட்டம் ஒன்றினை அவிஷ்க பெர்னாண்டோ – திசர பெரேரா ஜோடி வழங்கியது.
அந்தவகையில் மூன்றாம் விக்கெட்டுக்காக அவிஷ்க பெர்னாண்டோ – திசர பெரேரா ஜோடி மிகவும் சிறப்பான முறையில் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருந்தது. இந்த இணைப்பாட்டத்தினுள் மிகவும் அபாரமாக செயற்பட்டிருந்த அவிஷ்க பெர்னாண்டோ திலகரட்ன சம்பத் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசியிருந்ததோடு, வெறும் 23 பந்துகளில் 7 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அவிஷ்க போன்று மறுமுனையில் அதிரடி அரைச்சதம் விளாசிய திசர பெரேராவும் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர சத்துரங்க டி சில்வாவின் இறுதிநேர அதிரடியுடன் ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சத்துரங்க டி சில்வா 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சோல்ட், தரிந்து மற்றும் ஷட்ரானின் பிரகாசிப்புடன் ஜயண்ட்ஸ் அணிக்கு 2வது வெற்றி
கண்டி வொரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சிராஸ் அஹ்மட் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக டக்வெத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்ட 181 ஓட்டங்களை 14 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணிக்கு ஆரம்பவீரர்களாக களம் வந்த சரித் அசலன்க மற்றும் கென்னர் லூயிஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.
இதில் கண்டி வொரியர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய சரித் அசலன்க வெறும் 19 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 42 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
இதனையடுத்து களம் வந்த ரொவ்மன் பவல் கென்மார் லூயிஸ் உடன் இணைந்து ஜப்னா கிங்ஸ் பந்துவீச்சாளர்களை சிதைக்கத் தொடங்கினார். அனைத்து திசைகளிலும் சிக்ஸர் மழை பொழிந்த ரொவ்மன் பவல் வெறும் 15 பந்துகளில் அரைச்சதம் தாண்டி, LPL வரலாற்றில் பதியப்பட்ட
இரண்டாவது அதிவேக அரைச்சதத்தினைப் பதிவு செய்ததோடு கண்டி வொரியர்ஸ் அணியினையும் வெற்றிக்காக தொடர்ந்து முன்னேற்றியிருந்தார்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சுரங்க லக்மாலின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக ரொவ்மன் பவலின் விக்கெட் பறிபோனது. கண்டி வொரியர்ஸ் அணியின் இரண்டாவது விக்கெட்டான ரொவ்மன் பவல் 19 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் குவித்தார்.
ரொவ்மன் பவலின் விக்கெட்டினை அடுத்து கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் சற்று மந்தமாகிய நிலையில், கண்டி வொரியர்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை 19 வயதின்கீ்ழ் மகளிர் கால்பந்து குழாத்தில் நான்கு யாழ் வீராங்கனைகள்
கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கென்னர் லூயிஸ் 36 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்றிருக்க, ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், சுரங்க லக்மால் மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது சுரங்க லக்மாலிற்கு வழங்கப்பட்டது. இப்போட்டியின் வெற்றியுடன் LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி தமது இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்ய, கண்டி வொரியர்ஸ் அணிக்கு இது தொடரில் மூன்றாவது தொடர் தோல்வியாக அமைகின்றது.
போட்டியின் சுருக்கம்
[insert_php] $contents = file_get_contents(“https://stats.thepapare.com/cricket/embed/match_result/kandy-v-jaffna-match-07”); echo $contents;[/insert_php]
முடிவு – ஜப்னா கிங்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<