அட்லடிகோ – பார்சிலோனா மோதல் சமநிலையில்; ரியல் மெட்ரிடுக்கு அதிர்ச்சித் தோல்வி

183

சர்வதேச போட்டிகளுக்காக வழங்கப்பட்ட விடுமுறையைத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ள லாலிகா போட்டிகளில் ஏய்பர் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதேவேளை, பார்சிலோனா மற்றும் அட்லடிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

ஏய்பர் எதிர் ரியல் மெட்ரிட்

ஏய்பர் அணியின் சொந்த அரங்கில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வியுற்றது.

ரியல் மெட்ரிட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளரானார் சென்டியாகோ

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ….

ரியல் மெட்ரிட் அணியின் 116 வருட வரலாற்றில் ஏய்பர் அணியுடனான போட்டியில் அவ்வணி முதன் முறையாக தோல்வியுற்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆட்டத்தின் 16 ஆம் நிமிடத்தின் போதே ரியல் மெட்ரிட் அணிக்கெதிரான முதல் கோலை ஏய்பர் அணி வீரர் எஸ்கலாண்டே மூலம் ஏய்பர் அணி பெற்றது.

போட்டி முழுவதும் ரியல் மெட்ரிட் அணி பல வாய்ப்புக்களை பெற்ற போதும் எதிரணி கோல் காப்பாளரின் சிறந்த தடுப்பு மற்றும் ஓப்ஸைட் நியதிகள் காரணமாக எவ்வித கோலையும் ரியல் மெட்ரிட் வீரர்களால் பெற முடியவில்லை.

எனினும், தொடர்ந்தும் சவால் விடுத்த ஏய்பர் அணி வீரர்களின் சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் மூலம் போட்டியின் 52 மற்றும் 57 ஆம் நிமிடங்களில் பெறப்பட்ட இரு கோல்களினால் போட்டியில் ஏய்பர் அணி வெற்றியை பெற்றுக் கொண்டது.

ரியல் மெட்ரிட் அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சென்டியாகோ சோலாரி நிரந்தரப் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவரின் பயிற்றுவிப்பின் கீழ் நடைபெற்ற முதல் போட்டி இதுவாகும்.

சொந்த மைதானத்தில் அதிர்ச்சித் தோல்வியுற்ற பார்சிலோனா

லா லிகா கால்பந்து சுற்றின் 12 வது வாரத்திற்கான போட்டிகள் நிறைவுற்றுள்ள ….

எனினும், சென்டியாகோ சோலாரி தற்காலிக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய வேளையில் நடைபெற்ற இறுதி 4 போட்டிகளிலும் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

அட்லடிகோ மெட்ரிட் எதிர் பார்சிலோனா

மெட்ரோபோலிடானோ அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி இறுதி நிமிடத்தில் பெறப்பட்ட கோல்களினால் சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் துவக்கம் முதலே பார்சிலோனா அணியின் ஆதிக்கமே கூடுதலான நேரம் தென்பட்டது. எனினும், இரு அணிகளும் முதல் பாதியின் குறிப்பிடத்தக்க கூடிய அளவிலான எந்தவிதமான வெற்றிகரமான வாய்ப்ப்புக்களையும் பெறவில்லை.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்தாடுவதிலே அதிக கவனம் செலுத்தினர்.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 15 நிமிடங்கள் கடந்த வேளையில் அட்லடிகோ அணி முதல் வாய்ப்பை பெற்றது.

மத்திய களத்திலிருந்து எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் பின்கள வீரர்களை தாண்டி அட்லடிகோ முன்கள வீரர் அன்டோனியோ கிரீஸ்மன் கொண்டு சென்ற பந்தை பெற்ற கோஸ்டா கோலை நோக்கி பந்தை உட்செலுத்த முயற்சித்த வேளையில் எதிரணியின் கோல் காப்பாளர் பந்தை சிறந்த முறையில் தடுத்தார்.

AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்

தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள …

பார்சிலோனாவிற்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பினை பயன்படுத்தி லியோனல் மெஸ்ஸி கோலை பெற முயற்சித்த போதும் பந்தானது கோல் கம்பங்களுக்கு மேலால் சென்றது.

தொடர்ந்து சவால் விடுத்த அட்லடிகோ வீரர்கள் 77ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் போது முன்கள வீரர் டியாகோ கொஸ்டா மூலம் முதல் கோலை பெற்றனர்.

எதிரணி பந்தை தடுத்தாடுவதை அவதானித்த பார்சிலோனா வீரர்களால் தொடர்ந்து சவால் விடுக்கப்பட்டது. இதன் பலனாக போட்டியின் 90 ஆம் நிமிடத்தில் மெஸ்ஸி மூலம் பெனால்டி எல்லையிலிருந்து வழங்கப்பட்ட பந்தை மாற்று வீரராக களமிறங்கிய ஒஸ்மானே டெம்பல்லே கோலாக மாற்றினார்.

மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில் அட்லடிகோ அணி வெற்றி பெறுவதற்காக முயற்சித்த போதும் பார்சிலோனா பின்கள வீரர்கள் அவற்றை தடுத்தனர்.

 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<