இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடரில் இருந்து அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான கேமரூன் கிரீன், பக்கவாட்டு தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.
>>லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் புதிய ஆலோசகராக கேன் வில்லியம்சன்<<
இதனையடுத்து நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுச்சேனேவிற்கு, அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் ஒருநாள் தொடரில் விலகியுள்ள கிரீன் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரிற்கு முழு உடற்தகுதியுடன் தயாராகுவார் என நம்பப்படுகின்றது.
லபுச்சேனே உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலையிலையே அவர், கீரினின் பிரதியீட்டு வீரராக இணைக்கப்பட்டிருக்கின்றார். அவர் அண்மைய ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் நான்கு சதங்களை விளாசியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் இந்த ஞாயிற்றுக்கிழமை (19) பேர்த்தில் அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















