யாழ். பல்கலைக்கழகம், யாழ் ஸ்ரார்ஸ் அணிகள் அரையிறுதியில்

705
Jaffna District Hockey Tournament-Day-

யாழ். மாவட்ட ஹொக்கி சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாத்த ஹொக்கித் தொடர் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகளின்படி, அரையிறுதிச் சுற்றுக்கு யாழ். பல்கலைக்கழகம் மற்றும் யாழ் ஸ்ரார்ஸ் அணிகள் தெரிவாகியுள்ளன.

வலைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு

விலகல் முறையில் இடம்பெற்று வரும் இத்தொடரில் யாழ். பல்கலைக்கழகம், கிறாஸ் ஹொப்பேர்ஸ், ஜோனியன்ஸ், யூனியன், யாழ் ஸ்ரார்ஸ், நியூ வாரியர்ஸ், ஓல்ட் கோல்ட்ஸ் ஆகிய ஏழு அணிகள் பங்கெடுத்து வருகின்றன. கடந்த வருடம் இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியை வீழ்த்தி ஓல்ட்கோல்ட்ஸ் அணி கிண்ணத்தைத் தமதாக்கியிருந்தது.

இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற விலகல் முயைிலான சுற்றும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக அணி எதிர் கிறாஸ் ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம்

இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியிரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, தமது அணியை முன்னிலைப் படுத்துவதற்காக மிகவும் வலுவாகப் போராடினர். இரு அணியினரது முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிய, கோல் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது முதல் பாதி.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில் பல்கலை அணியின் அனோஜிதன் முதல் கோலினைப் போட, ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. பதிலிற்கு 39ஆவது நிமிடத்தில் கிறாஸ் ஹொப்பேர்ஸ் அணியினர் ஒரு கோலினைப் பெற்று கோல் கணக்கை சமப்படுத்தினர்.

பலத்த போராட்டத்திற்கு மத்தியில்  46ஆவது நிமிடத்தில் யாழ். பல்கலைக்கழக அணியின் எழிலன் நேரடியாக ஒரு கோலினைப் போட, கிராஸ் ஹொப்பேர்ஸ் அணியுடனான போட்டியை 2-1 என வெற்றிகொண்ட யாழ் பல்கலைக்கழக அணி அரையிறுதிப் போட்டியில் ஜோனியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – அனோஜிதன் (யாழ். பல்கலைக்கழக அணி)

 யாழ். பல்கலைக்கழக அணி
யாழ். பல்கலைக்கழக அணி

யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நியூ வாரியர்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆரம்பம் முதலே மிகவும் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணியினரும், தமது அணியை முன்னிலைப்படுத்துவதற்கு பலத்த போராட்டத்தை வெளிப்படுத்தினர். இரு தரப்பினரதும் கோல் முயற்சிகளையும் எதிரணி வீரர்கள் தகர்க்க, கோல்கள் அற்ற நிலையில் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.

இலங்கை அணியை பயிற்றுவிக்கவுள்ள பிஜி நாட்டின் பெரேடி வெரெபுலா

பின்னர், தீர்மானம் மிக்க இரண்டாவது பாதி ஆரம்பமாகி 3ஆவது நிமிடத்தில் யாழ் ஸ்ரார்ஸ் அணியின் நேசரூபன் முதல் கோலினைப் பெற்றுக்கொடுத்தார். 42ஆவது நிமிடத்தில் கோபிநாத் மேலும் ஒரு கோலினைப் பெற்றுக்கொடுக்க முன்னிலையினை 2 ஆக அதிகரித்தது யாழ் ஸ்ரார்ஸ்.

அதேவேகத்தில் நேசரூபன் தனது இரண்டாவது கோலினைப் பதிவுசெய்ய, இறுதியாக நியூ வாரியர்ஸ் அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ் ஸ்ரார்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஓல்ட் கோல்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

Thepapare.comஇன் ஆட்ட நாயகன்நேசரூபன் (யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம்)

 யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம்
யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம்

இன்று இத்தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது நாளாகும்.