யாழ்.வம்சாவளி வீரர் அவுஸ்திரேலிய 19 வயது கிரிக்கெட் அணியில்

3
TAMIL CRICKET NEWS 

அடுத்த ஆண்டு (2026) நமிபீயா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை வம்சாவளி வீரரான நிதேஷ் சாமுவேல் இணைக்கப்பட்டுள்ளார்.

>>அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கை வம்சாவளி இளம் கிரிக்கெட் வீரர்<<

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் பட்மின்டன் வீரர் லால் நிகோலஸின் புதல்வரான நிதேஷ், அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் பிராந்தியத்திற்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் நிதேஷ், உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனா மூலமே இந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

அதேநேரம் நிதேஷ் உடன் சேர்த்து நியூ சவூத் வேல்ஸ் பிராந்தியத்தினை சேர்ந்த மொத்தம் ஆறு வீரர்கள், அவுஸ்திரேலிய கனிஷ்ட கிரிக்கெட் அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியா இளையோர் உலகக் கிண்ணத்திற்கான குழு A இல் ஜப்பான், இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளதோடு, அது தனது முதல் போட்டியில் ஜனவரி 16 இல் அயர்லாந்தினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் குழாம்:

 

ஒலிவேர் பீக்கே (தலைவர்), கேசி பார்டன், நாடன் கூரே, ஜெய்டன் டிரேப்பர், பென் கோர்டன், ஸ்டீவன் ஹோகன், தோமஸ் ஹோகன், ஜோன் ஜேம்ஸ், சார்லஸ் லாக்முண்ட், வில் மலஜ்சுக், நிதேஷ் சாமுவேல்ஸ், ஹெய்டன் ஷில்லர், ஆர்யன் சர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<