முன்வரிசை வீரர்களின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ள அயர்லாந்து A அணி

447

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி, ஆகியவைக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (13) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்தது.

நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ரொஹான் சன்ஜய…

நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்ட நிறைவில் அயர்லாந்து A அணி, ஜேம்ஸ் மெக்கொல்லம், ஸ்டீபன் டோஹேனி, லோர்கன் டக்கர் மற்றும் நெயில் ரொக்  ஆகியோரின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A அணி, தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இலங்கை A அணியுடன் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆடிவருகின்றது. இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை A அணி, வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையிலேயே தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணியின் தலைவர் அஷான் பிரியன்ஞன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அயர்லாந்து A அணிக்காக வழங்கினார்.

இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து A அணியினர் போட்டி தொடங்கி ஒரு கட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து  தடுமாறிய போதிலும் அவ்வணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஸ்டீபன் டொஹேனி மற்றும் ஜேம்ஸ் மெக்கொல்லம் ஆகியோர் அரைச்சதங்கள் பெற்று 110 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தனியொரு…

எனினும், இந்த இணைப்பாட்டத்தை மொஹமட் சிராஸ் இலங்கை A அணி சார்பில் தகர்க்க, அயர்லாந்து A அணி குறுகிய இடைவெளிக்குள் இன்னும் சில விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதில், ஜேம்ஸ் மெக்கொல்லம் 7 பெளண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களையும், ஸ்டீபன் டோஹேனி 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், மீண்டும் அயர்லாந்து A அணிக்காக ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் மற்றும் நெயில் ரொக் ஆகியோர் சத இணைப்பாட்டம் (128*) ஒன்றினை உருவாக்கினர்.

இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு அயர்லாந்து A அணி வலுப்பெற்றிருந்த போது, காலநிலை சீர்கேட்டினால் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. அதன்படி, முதல் நாள் ஆட்ட நிறைவில் அயர்லாந்து A அணி தமது முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ஸ்திர நிலையில் உள்ளது.

அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற லோர்கன் டக்கர் 61 ஓட்டங்களுடனும், நெயில் ரொக் 57 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.

இதேநேரம், இலங்கை A அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுக்களையும், லசித் அம்புல்தெனிய மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் .