இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2020 பருவகால தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. தொடரின் முதல் பாதியை போல இல்லாமல் இரண்டாம் பாதியில் நிறைய மாற்றங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெறுகின்றன.
டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இந்த தொடரில் மிக முக்கியமான அணிகளாக உருவெடுத்துள்ளதுடன் இந்த அணிகள் லீக் சுற்று புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்காக கடுமையாகப் போட்டியிடுகின்றன.
மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐ.பி.எல் தொடரில் 60 வீதமான லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. மறுபுறத்தில் பெரும்பாலான அணிகள் தலா 11 போட்டிகளை விளையாடி முதல் பாதியை முடித்துள்ளன.
IPL தொடரில் புதிய வரலாறு படைத்த மொஹமட் சிராஜ்
எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை ஐ.பி.எல் தொடரில் இதுவரை இடம்பெற்ற சர்ச்சைகள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சுரேஷ் ரெய்னா பால்கனி சர்ச்சை
இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதுடன், தொடரிலிருந்தும் விலகினார்.

சென்னை அணியில் கொரோனா பரவல்
ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க சென்ற வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவலை தடுக்க முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு முறை கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் சென்னை அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் 12 நிர்வாகிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

Video: LPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்..! முழுமையான பார்வை | Sports Round-up – Epi 136
எனினும், குறித்த வீரர்கள் இருவரும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு சென்னை அணியுடன் இணைந்து கொண்டனர்.
ஓட்ட எண்ணிக்கையில் ஏற்பட்ட தவறு
இம்முறை ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு One Short விதிமுறைப்படி ஒரு ஓட்டம் குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை துரத்திய போது 19-வது ஓவரில் கிறிஸ் ஜோர்டன் இரு ஓட்டங்களுக்கு ஓடினார். அப்போது எல்லையை (கிரீஸை) தொடவில்லை என நடுவர் நிதின் மேனன் ஒரு ஓட்டத்தை குறைத்தார்.

எனினும், இறுதியில் குறித்த போட்டியை சமநிலை செய்த பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது.
3ஆவது நடுவரின் முடிவிற்கு எதிராக DRS கோரிக்கை:
இம்முறை ஐ.பி.எல் தொடரில் இரண்டாவது முறையாக கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சர்ச்சைக்குள் சிக்கியது. இம்முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் முஜிப் உர் ரஹ்மான் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்தார்.

சுனில் கவாஸ்கரின் அனுஷ்கா சர்மா தொடர்பிலான கருத்து
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்தில் போதியளவு பிரகாசிக்கவில்லை. மேலும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் பிடியெடுப்புகளையும் தவறவிட்டார். ஒட்டுமொத்தத்தில் கோலிக்கு முதல் 2 போட்டிகளும் சரியாக அமையவில்லை.

சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ!
சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவரை வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
டொம் கரண் DRS

மான்கட் செய்ய மறுத்த அஸ்வின்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசும் முன் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்றார். அப்போது அஸ்வின் அவரை ஆட்டமிழப்பு செய்யாமல் எச்சரிக்கை செய்தார். போட்டியின் பிறகு இது தொடர்பாக அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அஸ்வினின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. இது நேர்மையான முறையல்ல. இந்த முறையில் வீரரை ஆட்டமிழக்கச் செய்வது ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும் என்பதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்தது.
Video: டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41
இருப்பினும், நான் ஆட்ட விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினேன் என்று அஸ்வின் தனது செயலை நியாப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டோனியின் மகளுக்கு மிரட்டல்
மஹேந்திரசிங் டோனியின் 5 வயது மகள் ஸிவா தோனிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, டோனியின் மனைவி அளித்த புகாரின் பேரில் நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டான்.
மும்பை அணியின் டுவிட்டர் பதிவு
மும்பை – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மும்பை அணியின் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சையான டுவீட் பதிவிடபட்டது.

Wide முடிவை மாற்றிய நடுவர்

கண்டி டஸ்கர்ஸ் அணியை வாங்கிய சல்மான் கான் குடும்பம்
இதனைக் கண்டு நடுவர் தனது Wide முடிவை மாற்றினார். எனினும் ரீப்ளேவில் பந்து வைட் பந்தாக இருந்தது தெரியவந்தது. இதுவும் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
சூதாட்ட புகார்
இம்முறை ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் செய்ய ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாக சென்னை அணி வீரர் ஒருவர் பிசிசிஐயிடம் புகார் அளித்தார். அந்த வீரர் யார் என்ற விபரத்தை பிசிசிஐ இரகசியமாக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக் தலைவர் பதவியிலிருந்து திடீர் விலகல்

எனினும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தமக்கு அறிவித்ததாக கொல்கத்தா அணி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் புதிய தலைவராக இயன் மோர்கன் நியமிக்கப்பட்டார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















