இம்முறை ஐ.பி.எல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்

775

நடைபெற்று முடிந்த 11ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் அதிக தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றிய அணி (3 தடவைகள்) என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமப்படுத்தியுள்ளது.

>> அதிக ஐ.பி.எல் கிண்ணத்தை வென்ற சாதனையை சமன் செய்தது சென்னை <<

இம்முறை லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் (18 புள்ளி), சென்னை சுப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ரோயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் தொடரின் பிளேஓப் சுற்றுக்கு முன்னேறின. அதேபோன்று, நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் இலவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டன.

இந்த ஆண்டுக்கான .பி.எல் தொடருக்காக 8 அணிகளும் 18 வீரர்களை கோடிக் கணக்கில் கொடுத்து தக்க வைத்துக் கொண்டன. அத்துடன், இம்முறை ஏலப்பட்டியலில் 360 இந்திய வீரர்கள் உட்பட 578 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று இருந்தனர். இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.431 கோடிக்கு 169 வீரர்கள் ஏலம் போனார்கள். இதில் 56 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முக்கிய நட்சத்திர வீரர்கள் ஜொலிப்பார்கள் என கோடிகணக்கான பணம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டனர். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் இம்முறை பிரகாசிக்கவில்லை. அவர்கள் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் மற்றும் எடுத்த விக்கெட்டுக்கள் அவர்கள் ஏலம் எடுத்த தொகையுடன் ஒப்பிடும் போது பல இலட்சம் மதிப்புள்ளதாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.   

>> Charith Asalanka – 55 runs in 58 balls <<

இந்நிலையில், இந்த பருவத்தில் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய 11 முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பற்றி பார்ப்போம்.

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

 

 

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் .பி.எல் ஏலத்தில் அதிகமான தொகையான ரூ.12.50 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் ஆவார். கடந்த வருடம் ரைஸிங் புனே அணிக்காக விளையாடிய அவர், இவ்வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இம்முறை போட்டித் தொடரின் எந்தவொரு லீக் ஆட்டத்திலும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அவரால் முத்திரை பதிக்க முடியாமல் போனது. 13 போட்டிகளில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இவரின் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கொடுத்த விலை ரூ.6.38 இலட்சமாகும்.

இதேநேரம், 13 போட்டிகளில் 29 ஓவர்கள் பந்துவீசி 8 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்றியிருந்தார். எனவே பெரிதும் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

கிளென் மெக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)

கடந்த பருவங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கிளென் மெக்ஸ்வெல்லை இம்முறை .பி.எல் ஏலத்தில் ரூ.9 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் விலைக்கு வாங்கியது.

>> உலக பதினொருவர் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி<<

இம்முறை .பி.எல் தொடரில் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் பிரகாசிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமும் தலைகீழாக மாறியது.

சர்வதேச டி-20 யில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ள மெக்ஸ்வெல், இம்முறை ஒரு போட்டியில் கூட பிரகாசிக்கவில்லை. 12 போட்டிகளில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 169 ஓட்டங்களையே குவித்தார். இதில் அவர் 49 ஓட்டங்களையே அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ் இந்த முறை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்தார். பெங்களூர் அணி வோக்ஸை ரூ.7.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வோக்ஸ், 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

எனவே, இம்முறையும் பிரகாசிப்பார் என வோக்ஸை எடுத்த பெங்களூர் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவ்வணிக்காக 5 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய வோக்ஸ் 17 ஓட்டங்களையும், 8 விக்கெட்டுகளையும் மாத்திரமே கைப்பற்றினார்.

ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)

சர்வதேச டி-20 தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்ச்சை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.6.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக நின்று ஆடுகின்ற திறமையைக் கொண்ட ஆரோன், முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்கி டக்அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார்.  

>> Upul Tharanga’s brilliant 127 off 121 balls <<

அதன்பிறகு மத்திய வரிசை வீரராக களமிறக்கப்பட்ட அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ஆரோன் பின்ஞ்ச் 134 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

கிரென் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்)

இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரரான கிரென் பொல்லார்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி 5.40 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது.

கடந்த சில .பி.எல் போட்டித் தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வந்த பொல்லார்டை மும்பை அணி மீண்டும் தமது அணிக்குள் கொண்டு வந்தாலும், அவரால் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மா பொல்லார்ட்டுக்கு பல தடவைகள் வாய்ப்பினை வழங்கியிருந்த போதிலும் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிவிட்டார். இதனால் ஏழு போட்டிகளோடு மும்பை தரப்பினர் பொல்லார்ட்டை கழற்றிவிட்டனர். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பொல்லார்ட் 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான பிரண்டன் மெக்கல்லம் 3.60 கோடி ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.  

>> Photos & Albums – ThePapare.com << 

கடந்த .பி.எல் போட்டிகளில் தனது அதிரடியான சதம், அரைச் சதங்களால் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முக்கிய வீரர்களின் ஒருவரான பிரண்டன் மெக்கல்லம், இம்முறை .பி.எல் தொடரில் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

உலகின் மிகச்சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மெக்கல்லமுக்கு இம்முறை .பி.எல் தொடரில் 6 போட்டிகளில் மாத்திரம் விளையாட வாய்ப்பு கிட்டியதுடன், அதில் அவர் 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டார்.  

கோரி அண்டர்சன் (நியூசிலாந்து)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்டர்நைல் காயம் காரணமாக விலகியதை அடுத்து இம்முறை ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்காத நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கோரி அண்டர்சன் அவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

அண்மைக்காலமாக மோசமான போர்ம் மற்றும் உபாதை காரணமாக அண்டர்சனுக்கு நியூசிலாந்து அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நன்றாக விளையாடுவார் என நம்பி எடுத்த பெங்களூர் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகளில் மாத்திரம் அவ்வணிக்காக விளையாடிய அண்டர்சன் முதல் போட்டியில் ஓட்டமெதனையும் பெறாமல் டக்அவுட் ஆகியிருந்ததுடன், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 17 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.  

மிச்செல் ஜொன்சன் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் மிட்செல் ஜொன்சன் பந்துவீச்சில் அனல் பறக்கும். 3 வருடங்களுக்கு முன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அத்தகைய அனுபவமிக்க பந்துவீச்சாளரை இந்த முறை .பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.  

>> ரஷீத் கானை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் : ஆப்கான் அதிபர் << 

முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் அவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும் உபாதை காரணமாக அவர் விலகியதை அடுத்து மிட்செல் ஜொன்சன் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்தது. ஆனால், 10 போட்டிகளில் பந்துவீசிய ஜொன்சன் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

கொலின் முன்ரோ (நியூசிலாந்து)

நியூசிலாந்து வீரரான கொலின் முன்ரோ சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.1.90 காடிக்கு விலைக்கு வாங்கியது.

டி-20 போட்டிகளுக்கான தரவரிசையில் 2ஆம் இடத்தில் கொலின் முன்ரோ இருப்பதால் மிகப்பெரிய பலமாக அணிக்கு இருப்பார் என்று டெல்லி அணி நினைத்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட முன்ரோ சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கிய முன்ரோ 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அதில் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இம்ரான் தாஹிர் (தென்னாபிரிக்கா)

தென்னாபிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தாஹிர் அதன்பின் சொதப்பினார்.

இதனால் சென்னை அணி இம்ரான் தாஹிரை ஓரம் கட்டியது. 6 போட்டிகளில் விளையாடிய இம்ரான் மொத்தமாக 6 விக்கெட்டுகளையே வீழ்த்தினார்.

>> Heavens open up as Colombo joins Galle for final showdown – Tamil <<

முஸ்தபிசூர் ரஹ்மான் (பங்களாதேஷ்)

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ்மான் 2.2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.   

கடந்த .பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடிய அவரை, நன்றாக விளையாடுவார் என நம்பி எடுத்த மும்பை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 7 போட்டிகளில் மாத்திரம் அவ்வணிக்காக விளையாடிய முஸ்தபிசூர் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றினார்.

அதிலும் குறிப்பாக தோள் பட்டை உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்ற முஸ்தபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றார்..

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<