சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று (11) ஆரம்பிக்கின்றது.
ஆசிய லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் – இலங்கை லயன்ஸ் குழாம் வெளியீடு
தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சிகளை மேற்கொண்டுவந்தது. இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை (10) பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, ரிஷப் பண்டின் மீது பந்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அவரால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இவருடைய உபாதை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்திய T20I அணிக்கு திரும்பியுள்ள இசான் கிஷன் ஒருநாள் அணியிலும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















