புதிய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மே.இ. தீவுகளுடன் மோதும் இந்தியா

177

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள இருதரப்பு தொடர்களின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.

முதல் நாள் ஆட்டத்தில் பிரகாசித்த குரூஸ்புள்ளே, ரமேஷ் மெண்டிஸ்!

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகின்றது.

இந்த சுற்றுப் பயணம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றினை உள்ளடக்கியிருக்கும் நிலையில், இந்திய அணியின் சுற்றுப் பயணத்தில் முதலாவதாக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது.

டொமினிகா மற்றும் ட்ரினிடாட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புதிய பருவத்தில் விளையாடும் முதல் தொடராக அமையவிருக்கின்றது. இந்தியா கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியினைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம்!

டெஸ்ட் போட்டிகளின் பின்னர் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதோடு ஒருநாள் தொடரின் போட்டிகள் பார்படோஸ் மற்றும் ட்ரினிடாட் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது.

ஒருநாள் தொடரின் பின்னர் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறுகின்றது. T20 தொடரின் முதல் மூன்று போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும், தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா நகரிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் தொடர் மூலம் இந்திய அணியானது உலகக் கிண்ணத் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கு தயாராக பயிற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் – ஜூலை 12-16 – டொமினிகா
  • இரண்டாவது டெஸ்ட் – ஜூலை 20-24 – ட்ரினிடாட்

ஒருநாள் தொடர்

  • முதல் போட்டி – ஜூலை 27 – பார்படோஸ்
  • இரண்டாவது போட்டி – ஜூலை 29 – பார்படோஸ்
  • மூன்றாவது போட்டி – ஓகஸ்ட் 1 – ட்ரினிடாட்

T20 தொடர்

  • முதல் போட்டி – ஓகஸ்ட் 3 – ட்ரினிடாட்
  • இரண்டாவது போட்டி – ஓகஸ்ட் 6 – கயானா
  • மூன்றாவது போட்டி – ஓகஸ்ட் 8 – கயானா
  • நான்காவது போட்டி – ஓகஸ்ட் 12 – புளோரிடா
  • ஐந்தாவது போட்டி – ஓகஸ்ட் 13 – புளோரிடா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<