ஐ.சி.சி. தொடர்களில் இந்திய – பாகிஸ்தான் மோதல் நடைபெறுவதில் சிக்கல்?

29
India-Pakistan ties

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையில் இனி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) போட்டிகள் நடைபெறுவது சந்கேத்திற்கு இடமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரரினை இணைக்கும் பங்களாதேஷ்<<

இந்தியாவின் காஷ்மீர் பஹால்கமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எதிராலியாகவே இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஐ.சி.சி. தொடர்களின் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

ஐ.சி.சி. இன் தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டும் ஒரே குழுவில் இடம்பெறுவது வழமை எனினும் தற்போது காஷ்மீரின் பஹால்கம் தீவிரவாத தாக்குதல்களை அடுத்து இந்திய – பாகிஸ்தான் அரசியல் மோதல்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எதிர்கால ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவினையும், பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்தியாவின் கிரிக்பஸ் (Cricbuzz) செய்தி இணையளதம் இது தொடர்பில் சில மாற்றுக் கருத்துக்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதி தலைவர் ராஜீவ் சுக்லா இந்திய அரசின் ஆணைப்படி இந்த விடயங்கள் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய – பாகிஸ்தான் அணிகள் பங்கெடுக்கும் ஐ.சி.சி. இன் கிரிக்கெட் தொடர்கள் விரைவில் நடைபெறாது என்கிற போதிலும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியில் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் ஆரம்பமாகுகின்றது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணியும் தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றாக தகுதிகாண் போட்டிகள் மூலம் மாறியிருக்கின்றது. குழுக்களாக பிரிக்கப்படாமல் நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான் ஆடுவதற்காக வேறு நாட்டின் மைதானமொன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதேவேளை இந்த ஆண்டு ஆடவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரும் நடைபெறவிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம்பெற்றிருக்கின்ற போதும் ஆசியக் கிண்ணத் தொடர் பற்றியும் தற்போது விடயங்களை உறுதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க <<