ஐசிசி உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் பிரதான அனுசரணையாளர்களாக முன்னணி தொழிநுட்ப நிறுவனமான IFS நிறுவனம் இணைந்துள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் மார்ச் 8ஆம் திகதிவரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
>>பாகிஸ்தான் T20 தொடரிற்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு<<
குறித்த இந்த தொடருக்கான இலங்கை அணியின் பிரதான அனுசரணையாளராக IFS நிறுவனம் இணைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி உலகக்கிண்ண ஜேர்சியின் முன் தோற்பட்டை பகுதியில் (leading arm) IFS நிறுவனத்தின் இலட்சினையுடனும், பயிற்சி ஜேர்சியில் முன் பகுதியில் இலட்சினையுடனும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட்டுடன் இணைவது தொடர்பில் கருத்து வெளியிட்ட IFS நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஓலிவர் பில்கர்ஸ்டோர்ஃபர்,
“ICC T20 உலகக் கிண்ணம் கிரிக்கெட்டின் மிகச் சுறுசுறுப்பான மற்றும் பரபரப்பான வடிவமாக உள்ளது. தாய் மண்ணில் போட்டியிடும் இலங்கையை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இதன் மூலம், இலங்கையுடன் கொண்டுள்ள ஆழமான வேரினையும் நீண்ட கால வரலாற்றையும், மேலும் நாட்டின் வளர்ச்சியையும் நாம் ஆதரிக்கிறோம் என்ற எங்கள் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வேலைவாய்ப்பு வழங்குநராக, கிரிக்கெட்டிலும் தொழில்நுட்பத் துறையிலும் இலங்கை திறமைகளை கொண்டாட இது ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். அத்துடன், எங்கள் குழுமும் உலகின் மிக முன்னேற்றமான நிறுவனங்களுக்கு தொழில்துறை AI தீர்வுகளை வழங்கி வருகின்றது” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















