தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் இந்தியா : பாகிஸ்தானுக்கு அபார வெற்றி

1078
DHARAMSALA, INDIA - MARCH 22: India celebrate the wicket of Sarah Taylor of England during the Women's ICC World Twenty20 India 2016 match between England and India at the HPCA Stadium on March 22, 2016 in Dharamsala, India. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

இவ்வருட ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள மகளிர் உலக கிண்ணத்திற்கான மேலதிக அணிகளை தெரிவு செய்யும் கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதில் நான்கு குழு நிலை ஆட்ட போட்டிகள் இன்று நிறைவடைந்தன.  

மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு இலகுவான முதல் வெற்றி

இந்தியா எதிர் அயர்லாந்து

P. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற குழு A இற்கான இப்போட்டியில் திருஷ் காமினி ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் உதவியுடன், வெறும் 125 ஓட்டங்களுக்குள் அயர்லாந்தினை மடக்கி இத்தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாத இந்திய மகளிர் அணி இத்தொடரில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியினை பதிவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இந்திய மகளிர் அணி: 250/2 (50) – திருஷி காமினி 113(146)*, தீப்தி சர்மா 89(128)

அயர்லாந்து மகளிர் அணி: 125 (49.1) – கேபி லூயிஸ் 33(70), பூணம் யாதவ் 30/3(10)

போட்டி முடிவுஇந்திய மகளிர் அணி 125 ஓட்டங்களால் வெற்றி


ஜிம்பாப்வே எதிர் தாய்லாந்து

MCA மைதானத்தில் நடைபெற்ற குழு A இற்கான இப்போட்டியில், வெற்றியிலக்கினை நெருங்கும் வகையில் செயற்பட்டிருந்த தாய்லாந்து மகளிர் அணி 36 ஓட்டங்களால் ஜிம்பாப்வேயிடம் தோல்வியினை தழுவியது. இத்தொடரில் ஜிம்பாப்வேயிற்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பதிவாகியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே மகளிர் அணி: 191/8 (50) – மேரிஏன் முசோன்டா 35(53), சனிதா சுத்திருஅங் 57/2 (10)

தாய்லாந்து மகளிர் அணி: 155 (47.3) சொர்னரின் டிப்போச் 50 (92), நொமேட்டர் முட்டாசா 28/4 (8.3)

போட்டி முடிவுஜிம்பாப்வே மகளிர் அணி 36 ஓட்டங்களால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் பபுவா நியூ கினியா

NCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த குழு B இற்கான இப்போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரினதும் சதங்களுடன் முதலாவது விக்கெட்டுக்காக 212 ஓட்டங்களினை பகிர்ந்த பாகிஸ்தான் மகளிர் அணி, 236 என்ற இமாலய ஓட்ட வித்தியாசத்தில் பபுவா நியூ கினியா மகளிர் அணியினை மண்கவ்வ செய்தது.

இத்தொடரில் மூலம் அறிமுகமாயிருந்த நஷ்ரா சந்து இப்போட்டியில் வெறும் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின்சுருக்கம்

பாகிஸ்தான் மகளிர் அணி: 276/5 (50) – அயெஷா ஷபர் 115 (98)*, ஜவேரியா கான் 100 (146), பெளக்கே சியக்கா 34/2 (10)

பபுவா நியூ கினியா மகளிர் அணி: 40 (24.5) – கோனியோ ஓலா 14(50), நஷ்ரா சந்து 11/5 (6) 


பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில், இடம்பெற்ற குழு B இற்கான மற்றுமொரு போட்டியில், ருமான அஹ்மதின் சகல துறை ஆட்ட உதவியுடன் ஸ்கொட்லாந்து அணியினை 7 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியினை சுவீகரித்துக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து மகளிர் அணி: 140 (49.1) – கரி அன்டர்சன் 28(57), சல்மா கட்டுன் 21/3(10), ருமானா அஹ்மத் 24/2 (10), ஹதீஜா துல் குப்ரா 31/3 (10)

பங்களாதேஷ் மகளிர் அணி: 143/3 (37.3) – பர்ஹானா ஹொக் 53(109)*, ருமானா அஹ்மத் 38(46)*

போட்டி முடிவுபங்களாதேஷ் மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி