டயலொக் தலைமையத்தை வந்தடைந்த ICC T20 உலகக்கிண்ணம்

ICC Men’s T20 World Cup 2026

3
ICC Men’s T20 World Cup 2026

சர்வதேச கிரிக்கெட்டின் உயரிய சின்னமான ICC T20 உலகக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் இன்றைய தினம் (23) டயலொக் ஆசி ஆட்டா தலைமையகத்தை வந்தடைந்தது.

ICC T20 உலகக்கிண்ணத் தொடரின் வெற்றிக்கிண்ண சுற்றுலாவினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் இந்த வெற்றிக்கிண்ணமானது டயலொக் ஆசி ஆட்டா தலைமையகத்தை வந்துசேர்ந்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இந்த நிகழ்வை முன்நின்று நடத்தியுள்ளமை இலங்கையில் நடைபெறவுள்ள இந்த உலகக்கிண்ணத்தின் மீதான உத்வேகத்தை அதிகரித்துள்ளது.

>>முக்கிய வேகப்பந்துவீச்சாளரை உலகக் கிண்ணத்தில் இழக்கும் நியூசிலாந்து<<

ICC T20 உலகக்கிண்ணத் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதிவரை இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் சபைகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவுடன் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு பங்காளராக இணைந்துள்ளமை, நிறுவனம் கிரிக்கெட் மீது கொண்டுள்ள இணைப்பை உறுதிசெய்கின்றது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களாக தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டுவந்த டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் இம்முறை ICC T20 உலகக்கிண்ணத் தொடரை தீவின் ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டுவருவதை எண்ணி பெருமிதம் கொள்கிறது.

நாட்டு மக்கள் தொழிநுட்ப ரீதியில் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்க நேரடி ஒளிபரப்பினை டிஜிட்டல் மூலமாகவும், பல்வேறு களச்செயற்பாடுகள் மூலம் ரசிகர்களை புதிய பரிணாமத்துக்கு அழைத்துச்சென்றுள்ளது.

தற்போது டயலொக் ஆசிஆட்டாவுடன் இணைந்து இம்முறை ICC T20 உலகக்கிண்ணத்தை ரசிகர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி Dialog Television மற்றும் Dialog Play App ஆகியவற்றில் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் எட்டியுள்ளதுடன், எம்முடன் கூட்டாண்மையில் இணைந்துள்ள Supreme TV மூலமாக அனைத்து மக்களும் தொடரை பார்வையிடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ICC T20 உலகக்கிண்ண சுற்றுலா மூலம் வெற்றிக்கிண்ணமானது கண்டி, தம்புள்ளை நகரங்களை கடந்து யாழ்ப்பாணத்துக்கும் கொண்டுசெல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<