ஐ.சி.சி.யின் புதிய ஆலோசனை

2865
ICC draws up proposals for major ODI revamp

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் குறைந்துள்ளது. இதை சரிசெய்வதற்கான ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தரவரிசையில் பிந்தையை நிலையில் இருக்கும் அணிகளுக்கும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகளுக்கும் போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்ல்லை.

முன்னணி அணிகளான இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து போன்ற அணிகள் இதுபோன்ற அணிகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த விரும்புவதில்லை. அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கிண்ண  போட்டியில்தான் பெரிய அணிகளுடன் மோத வாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்த நாடுகளில் கிரிக்கெட் பிரபலம் அடையாமல் உள்ளது.

இதனால் அனைத்து நாடுகளுக்கும் சமமான அளவில் கிரிக்கெட் போட்டிகள் கிடைக்க .சி.சி. முயற்சிசெய்கிறது. இதனால் ஒருநாள் தொடரில் மிகப்பெரிய மாறுதலை கொண்டு வரப்போகிறது.

அதன்படி ஒருநாள் கிரிக்கெட் லீக் என்ற தொடரை நடத்தலாம் என பரிந்துரை செய்ய இருக்கிறது. இதன்படி பார்த்தால் இந்த லீக் 13 நாடுகளுக்கிடையில் நடக்கும். தற்போது தரவரிசையில் இருக்கும் முதல் 10 அணிகளுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து இடம்பெறும். இன்னொரு அணி எது என்பதுதான் சிக்கல்.

இந்த அணிகள் ஒவ்வொரு அணிகளுடன் மூன்று போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் சாம்பியன் கோப்பைக்குப் போட்டியிடும். இந்தத் தொடரை மூன்று வருடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு உலகக்கோப்பை வருவதால் அதற்கு இந்த லீக் நல்ல பயிற்சியாக இருக்கும் என பி.சி.சி.. கருதுகிறது. இந்த லீக் தொடரை 2019ஆம் ஆண்டில் இருந்து நடத்த .சி.சி. உத்தேசித்துள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்