ஆஷஸ் தொடரில் இருந்து வெளியேறும் ஜோஸ் ஹேசல்வூட்

7

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான பேட் கம்மின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், மீண்டும் அவுஸ்திரேலிய அணியினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>சொந்த மண்ணில் ஓய்வு பெற ஆசை; சகீப் அல் ஹசன் விருப்பம்<<

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, இம்மாதம் 17ஆம் திகதி அடிலைட் நகரில் ஆரம்பமாகுகின்றது. இந்த போட்டியில் முதல் இரண்டு போட்டிகளிலும் உபாதைக்கு ஆளான காரணத்தினால் பங்கேற்காது போயிருந்த பேட் கம்மின்ஸ் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஸ் ஹேசல்வூட், தசை உபாதை காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உபாதைக்குள்ளான ஹேசல்வூட் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜாவும் அடிலைட் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் உள்வாங்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<