இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி அணிகளில் ஒன்றான ஹம்ப்ஷைர் இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் திலக் வெர்மாவினை குறுகிய கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>MI நியூவ் யோர்க்கின் தலைவராக நிக்கோலஸ் பூரன் நியமனம்<<
அந்தவகையில் திலக் வெர்மா குறிப்பிட்ட ஒப்பந்தம் வாயிலாக அடுத்த வாரம் (ஜூன் 18) தொடக்கம் ஒகஸ்ட் மாத ஆரம்பம் வரை (ஒகஸ்ட் 02), இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் ஹம்ப்ஷைர் அணிக்காக நான்கு முதல்தரப் போட்டிகளில் விளையாடவிருக்கின்றார்.
அத்துடன் ஹம்ப்ஷைர் அணிக்கு திலக் வெர்மா விளையாடுவதற்கான ஒப்புதலும் ஹைதராபாத் மாநில கிரிக்கெட் சபை (HCA) மூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி நம்பிக்கை வழங்கி வருகின்ற 22 வயது நிரம்பிய திலக் வெர்மா இதுவரை 18 முதல்தரப் போட்டிகளில் ஆடி, 50 இற்கு மேற்பட்ட துடுப்பாட்ட சராசரியுடன் 1204 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<