மூன்றாவது முறை விமர்சையாக நடைபெறவுள்ள கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக்

577

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த வருடமும் மிகவும் கோலகலமாக இடம்பெறவுள்ளது.

Photos : Grasshoppers Premier League 2018 | Auction & Opening Ceremony

Photos of Grasshoppers Premier League 2018 | Auction & Opening …

ஜி.பி.எல். (GPL) என்ற பெயரில் சுருக்கமாக குறிப்பிடப்படும் கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான  போட்டிகள் அணிக்கு ஏழு பேர் கொண்டதாகவும், ஐந்து ஓவர்கள் கொண்டதாகவும் அமையவிருக்கின்றன. எனினும், இத்தொடரின் முதல் இரண்டு பருவகாலத்திற்குமான போட்டிகள் அணியொன்றுக்கு ஆறு பேர் கொண்டதாகவே நடைபெற்றிருந்தன.  

இங்கிலாந்து நிறுவனமான ஜூரா தயாரிப்பின் (Jura Productions) பூரண அனுசரணையில் இடம்பெறும் இம்முறை ஜி.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளாக ஜப்னா பென்தர்ஸ், ரில்கோ ரைடர்ஸ், பொயின்ட்பெட்ரோ சுபர் கிங்ஸ், எக்ரஸிவ் போய்ஸ், டீப் டைவர்ஸ் மற்றும் நோர்த் ட்ராகன்ஸ் ஆகியவை காணப்படுகின்றன.

இந்த அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். இதில் குழு A இல் பொயின்ட்பெட்ரோ சுபர் கிங்ஸ் அணியும், டீப் டைவர்ஸ் அணியும், ஜப்னா பென்தர்ஸ் அணியும் இருக்கின்ற இதேவேளை, குழு B இல் தொடரின் நடப்புச் சம்பியனான நோர்த் ட்ராகன்ஸ் அணியும், எக்ரஸிவ் போய்ஸ் அணியும், ரில்கோ ரைடர்ஸ் அணியும் காணப்படுகின்றன.

குழு A   குழு B
பொயின்ட்பெட்ரோ சுபர் கிங்ஸ் நோர்த் ட்ராகன்ஸ்
டீப் டைவர்ஸ் எக்ரஸிவ் போய்ஸ்
ஜப்னா பென்தர்ஸ் ரில்கோ ரைடர்ஸ்

 

தொடரின் முதல் சுற்றில் இரண்டு குழுக்களிலும் காணப்படும் அணிகள் தமது குழுவில் உள்ள அணியொன்றுடன் ஒரு தடவை மோதும். இந்த போட்டி முடிவுகளின் அடிப்படையில், தத்தமது குழுக்களில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும். அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் இரண்டு அணிகளும் இந்தப் பருவகாலத்திற்கான கிறாஸ்ஹொப்பர் பிரீமியர் லீக்கின் சம்பியன் யார் எனப் பார்க்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தும்.

இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ்

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் …

ஜி.பி.எல். தொடரின் போட்டிகள் யாவும் இம்மாதம் 29ஆம் திகதி தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில்  காலை 8 மணி தொடக்கம் நடைபெறுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் தொடரில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கான ஏலமும், ஆரம்ப விழாவும் அண்மையில் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. வீரர்களுக்கான ஏலத்தில் யாழ்ப்பாணத்தின் 22 விளையாட்டு கழகங்களினை சேர்ந்த 85 வீரர்கள் வரையில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • ஜி.பி.எல். தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது 

வீரர்களின் ஏலம் ஒருபுறமிருக்க ஒவ்வொரு அணியினதும் உரிமையாளர்கள் தமது விருப்பத்திற்கு இணங்க அவர்கள் விரும்பும் வீரர் ஒருவரினை ஏலம் கோராமல் தமது அணிகளில் இணைந்திருந்தனர்.

ஒவ்வொரு வீரருக்குமான  அடிப்படை விலையாக 5,000 ரூபாய் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஜி.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்திலிருந்து ஆறு அணிகளினாலும் தலா 8 வீரர்கள் வீதம் மொத்தமாக 48 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். இதன்படி, அணிகளது உரிமையாளர்கள் ஏலமில்லாமல் ஏற்கனவே தெரிவு செய்த ஒரு வீரருடன் சேர்த்து ஒவ்வொரு அணியும் 9 வீரர்களுடன் காணப்படுகின்றது.

T-20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த பின்ச் : ஷமான், ராஹுல் முன்னேற்றம்

ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா – …

ஆறு அணிகளும் இம்முறைக்கான ஏலத்தில் 617,000 ரூபா பணத்தினை செலவு செய்திருக்கின்றன. இதில், அதிக தொகையினை செலவிட்ட அணியாக நோர்த் ட்ராகன்ஸ் அணி இருக்கின்றது. கடந்த ஆண்டிலும் வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிக தொகையினை (161,000 ரூபா) செலவிட்ட நோர்த் ட்ராகன்ஸ் அணி இம்முறை வீரர்களைக் கொள்வனவு செய்வதற்காக 186,000 ரூபா பணத்தினை செலவிட்டிருக்கின்றது.

அதோடு, கடந்த ஆண்டு போன்று இம்முறையும் அதிக விலை கொடுத்து வீரர் ஒருவரினை கொள்முதல் செய்த அணியாகவும் நோர்த் ட்ராகன்ஸ் அணி இருக்கின்றது. கடந்த ஆண்டு மணிப்பாய் பரிஷ் விளையாட்டு கழகத்தின் வினோத்திற்காக அதிக தொகையினை (61,000 ரூபா) செலவிட்ட நோர்த் ட்ராகன்ஸ் அணி இம்முறை யாழ்ப்பாணம் ஜோனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்தாபனுக்காக 60,000 ரூபா பணத்தினை செலவு செய்திருக்கின்றது.

பிரின்தாபன் தவிர அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஏனைய வீரர்களில் ஒருவராக AB விளையாட்டு கழகத்தின் றகுலன் உள்ளார். றகுலனை எக்ரஸிவ் போய்ஸ் அணி 51,000 ரூபா கொடுத்து வாங்கியிருந்தது.

வீரர்களின் கொள்வனவுக்காக செலவு செய்யப்பட்ட பணத்தில் 25% சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக் தொடரின் சிறப்பம்சமாகும்.

கடந்த பருவகாலங்களில் சமூக நலத்திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதி மூலம் விளையாட்டில் சாதனை புரிந்த வறிய பாடசாலை மாணவர்களும், வறுமையான பல குடும்பங்களும், விழிப்புலனற்ற கிரிக்கெட் அணியும் நன்மையடைந்திருந்தன.

Photos: Grasshoppers Premier League 2017

Photos of the Grasshoppers Premier League 2017

யாழ்ப்பாணத்தின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியிலும், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் பிரபல்யமாக இருக்கும் இந்த கிரிக்கெட் தொடரினை இம்முறையும் சிறப்பாக நடாத்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள், அனைவரிடமும் பூரண ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றனர்.

கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரிமியர் லீக் தொடரின் அனைத்து விடயங்களினையும் அறிய ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

குழாம் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையும்

ஜப்னா பென்தர்ஸ்

அணியின் உரிமையாளர்சி. சண்முகநாதன் (ராஜா கீரிம் ஹவுஸ்)

  1. ரசிகரன் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 5,000 ரூபா
  2. கத்தியோன் (விக்டோரியன் வி.) – 5,000 ரூபா
  3. பிரசன்னா (ஜொல்லி ஸ்டார் வி.) – 5,000 ரூபா
  4. ஜனந்தன் (பல்கலைக் கழகம்) – 25,500 ரூபா
  5. விதுன் (திருநெல்வேலி வி.) – 5,000 ரூபா
  6. சிவராஜ் (திருநெல்வேலி வி.) – 5,000 ரூபா
  7. வாமணனன் (ஜொல்லி ஸ்டார் வி.) – 5,500 ரூபா

லவன் (திருநெல்வேலி வி.) – 5,500 ரூபா

  1. அஷோக் (திருநெல்வேலி வி.)

ரில்கோ ரைடர்ஸ்

அணி உரிமையாளர் – T. திலகராஜ் (யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டல்)

  1. மதுஷன் (ஜொல்லி ஸ்டார் வி.)  – 26,000 ரூபா
  2. பிரகலதன் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 5,000 ரூபா
  3. சுஜன் (ஸ்ரீ காமட்சி வி.) – 5,000 ரூபா
  4. தயாளன் (யூனியன் வி.) – 5,000 ரூபா
  5. சதியன் (KCCC வி.) – 5,000 ரூபா
  6. நிரோஷன் (ஓல்ட் கோல்ட்ஸ் வி.) – 5,000 ரூபா
  7. கெளதமன் (சென்ட்ரலைட் வி.) – 5,000 ரூபா
  8. ரஜிஷன் (பட்ரீசியன் வி.) – 5,000 ரூபா
  9. ஜானுதாஸ் (KCCC வி.)

பொயின்ட்பெட்ரோ சுபர் கிங்ஸ்

அணி உரிமையாளர் – 95/96 ஆம் ஆண்டு நண்பர்கள் (பருத்தித்துறை)

  1. டிலோசன் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 8,000 ரூபா
  2. றாஜீவ்குமார் (யாழ். மத்தி வி.) – 15,000 ரூபா
  3. மதுசன் (ஒல்ட் கோல்ட் வி.) – 5,000 ரூபா
  4. றஜீவன் (ஹார்ட்லியேட்ஸ் வி.) – 5,000 ரூபா
  5. அஜந்த் (ட்ரெய்டொன் வி.) – 5,000 ரூபா
  6. பிரதீப் (ஹார்ட்லியேட்ஸ் வி.) – 5,000 ரூபா
  7. மணிமாறன் (ஹார்ட்லியேட்ஸ் வி.) – 5,000 ரூபா
  8. சதீஷ் (ஹார்ட்லியேட்ஸ் வி.) – 5,000 ரூபா

சாஹித்யன் (ஹார்ட்லியேட்ஸ் வி.)

எக்ரஸிவ் போய்ஸ்

அணி உரிமையாளர்ஞானதார சர்மா

  1. மதுசன் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 15,000 ரூபா
  2. றகுலன் (AB வி.) – 51,000 ரூபா
  3. அதிலன் (AB வி.) – 40,000 ரூபா
  4. உத்தமகுமரன் (AB வி.) – 16,000 ரூபா
  5. பார்த்தீபன் (AB வி.) – 10,000 ரூபா
  6. ஜெரிக்துசன் (சென்ட்ரலைட் வி.) – 12,000 ரூபா
  7. நந்தகுமார் (ட்ரய்டொன் வி.) – 5,000 ரூபா
  8. டார்வின் (சென்ட்ரலைட் வி.)  

ஐ.சி.சி. தண்டனையிலிருந்து தப்பிக்க தயாராகும் சந்திமால், டூ ப்ளெசிஸ்

ஒழுக்காற்று குற்றச்சாட்டில் போட்டித்தடையை பெறும் …

நோர்த் ட்ராகன்ஸ்

அணி உரிமையாளர்ரி.எம்.கே. சகோதரர்கள்

  1. அஜித் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 21,000 ரூபா
  2. சன்சஜன் (யாழ். ஜோனியன்ஸ் வி.) – 35,000 ரூபா
  3. சுரேந்திரன் (திருநெல்வேலி வி.) – 30,000 ரூபா
  4. கலஹோகன் (பல்கலைக் கழகம்) – 25,000 ரூபா
  5. அருண்ராஜ் (திருநெல்வேலி YMHA வி.) – 5,000 ரூபா
  6. பிரபவன் (திருநெல்வேலி வி.) – 5,000 ரூபா
  7. பிரின்தாபன் (ஜோனியன்ஸ் வி.) – 60,000 ரூபா
  8. நிரோஜன் (சென்ட்ரலைட் வி.) – 5,000 ரூபா
  9. ஸ்ரீகுகன் (ஒல்ட் கோல்ட் வி.)

டீப் டைவர்ஸ்

அணி உரிமையாளர்லண்டன் நண்பர்கள்

  1. சரண்ராஜ் (கிறாஸ்ஹொப்பர்ஸ் வி.) – 20,000 ரூபா
  2. பிரியலக்ஷன் (ஒல்ட் கோல்ட்ஸ் வி.) – 7,500 ரூபா
  3. லினோதரன் (அரியாலை வி.) – 12,500 ரூபா
  4. ஜெயரூபன் (KCCC வி.) – 7,500 ரூபா
  5. ஜேம்ஸ் ஜான்சென் (சென்ட்ரலைட் வி.) – 5,500 ரூபா
  6. வினோத் (மாணிப்பாய் பரிஷ் வி.) – 36,500 ரூபா
  7. பத்மமுரளி (பட்ரீசியன் வி.) – 5,000 ரூபா
  8. செல்டோன் (சென்ட்ரலைட் வி.) – 5,000 ரூபா
  9. சுஜான்தன் (யூனியன் வி.)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…