ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகும் கிளன் பிலிப்ஸ்

12

தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்ற முக்கோண T20 தொடரில் இருந்து, நியூசிலாந்தின் சகலதுறை வீரரான கிளன் பிலிப்ஸ் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குசல் மெண்டிஸுக்கு இங்கிலாந்து கவுண்டி அணியில் வாய்ப்பு?

கிளன் பிலிப்ஸ் ஐக்கிய அமெரிக்க T20 லீக்கான மேஜர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தொடைத் தசை உபாதைக்கு முகம் கொடுத்ததனை அடுத்தே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியிருக்கின்றார் 

கிளன் பிலிப்ஸ் உபாதையில் இருந்து குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரின் பிரதியீட்டு வீரராக நியூசிலாந்தின் மேலதிக வீரராக காணப்பட்டிருந்த டிம் ரொபின்சன் இணைக்கப்பட்டிருக்கின்றார் 

கிளன் பிலிப்ஸ் ஒரு பக்கமிருக்க மேஜர் லீக் தொடரில் உபாதைக்குள்ளான மற்றுமொரு வீரரான பி(f)ன் அலனின் சேவைகளையும், நியூசிலாந்து அணியானது ஜிம்பாப்வே தொடரில் இழக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டி விடயமாகும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<