சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 4 இலங்கையர்

133
Four Athlete will Participate International Para Athletics Championship 2023

டுபாயில் நடைபெற்று வருகின்ற சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலக பாரா மெய்வல்லுனர் கிரேண்ட் பிரிக்ஸ் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக டுபாய் பாராலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 14ஆவது பஸ்ஸா சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 03ஆம் திகதி வரை டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

நடைபெறவுள்ள 2024 பரிஸ் பாராலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான தகுதிகாண் போட்டியாக அமைந்துள்ள இந்தப் போட்டித் தொடரில் 66 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணியில் 2021 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சமன் மதுரங்க சுபசிங்க ஆண்களுக்கான T47 பிரிவில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கவுள்ளார்.

இதனிடையே, ஆண்களுக்கான T42 பிரிவு 100 மீட்டர் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் அனில் பிரசன்ன ஜயலத்தும், ஆண்களுக்கான T44 பிரிவு 100 மீட்டர் மற்றும் நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சிகளில் நுவன் இந்திகவும், ஆண்களுக்கான T46 பிரிவு 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரதீப் சோமசிறியும் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளனர்.

இலங்கை பாரா மெய்வல்லுனர் அணி விபரம்:

  • சமன் மதுரங்க சுபசிங்க – 100 மீட்டர் மற்றும் நீளம் பாய்தல் (T47)
  • அனில் பிரசன்ன – 100 மீட்டர் மற்றும் நீளம் பாய்தல் (T42)
  • நுவன் இந்திக – 100 மீட்டர் மற்றும் நீளம் பாய்தல் (T44)
  • பிரதீப் சோமசிறி – 1500 மீட்டர் (T46)

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<