இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு அணிகள் மோதும் T20 தொடரில் இலங்கை 19 வயதின் கீழ் அணி பங்கேற்கவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் அணியானது, இந்தியா 19 வயதின் கீழ் ஏ அணி (A), இந்தியா 19 வயதின் கீழ் பி அணி (B) மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை சறுக்கியது எங்கே?
இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா 19 வயதின் கீழ் பி அணியை இம்மாதம் 13ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், 15ம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியையும், 17ம் திகதி இந்தியா ஏ அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் இறுதிப்போட்டியானது இம்மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளதுடன், குறிப்பிட்ட இந்த போட்டிகள் அனைத்தும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் போட்டி அட்டவணை
| திகதி | போட்டி | மைதானம் |
| நவம்பர் 13 | இலங்கை U19 எதிர் இந்தியா U19 B | விசாகப்பட்டினம் |
| நவம்பர் 15 | இலங்கை U19 எதிர் மே.தீவுகள் U19 | விசாகப்பட்டினம் |
| நவம்பர் 17 | இலங்கை U19 எதிர் இந்தியா U19 A | விசாகப்பட்டினம் |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















