கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று (14) சௌத்எம்ப்டன் நகரில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் மைதான நிலைமைகளைக் கருதி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கினார்.
இலங்கை அணியை இந்தியாவுடன் பிரதி செய்ய முடியாது: திமுத்
திமுத் கருணாரத்னவிற்கு இந்த ஆண்டு மிகவும் சுவாரஷ்யமாக…
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக விளையாடிய தென்னாபிரிக்க அணியுடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்நிலையில், அவ்வணி இங்கிலாந்து அணியுடனான போட்டியில் மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதிரடி சகலதுறை வீரர் அன்ரே ரசல், எவின் லூயிஸ், ஷன்னோன் கேப்ரியல் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட சுழல் பந்துவீச்சாளரான ஆஷ்லி நேர்ஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி – கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), அன்ரே ரசல், கார்லோஸ் ப்ராத்வைட், ஷன்னோன் கேப்ரியல், செல்டோன் கோல்ட்ரல், ஓசானே தோமஸ்
மறுமுனையில் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்த இங்கிலாந்து அணி, மாற்றங்கள் ஏதுமின்றி இப்போட்டியில் களமிறங்கியிருந்தது.
இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், லியம் ப்ளன்கெட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்
இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் கிறிஸ் கெயில் மற்றும் எவின் லூயிஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த எவின் லூயிஸ், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மூலம் போல்ட் செய்யப்பட்டு 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அவ்வணியின் முதல் விக்கெட்டாக மாறினார். அவரை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் நம்பிக்கையாக இருந்த கிறிஸ் கெயிலின் விக்கெட் நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்காக புதிய துடுப்பாட்ட வீரரான ஷாய் ஹோப்புடன் இணைந்து அத்திவாரம் போடப்பட்ட நிலையில் பறிபோனது. லியம் ப்ளன்கட்டின் பந்துவீச்சில் ஜொன்னி பெயர்ஸ்டோவிடம் பிடிகொடுத்த கிறிஸ் கெயில் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 41 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
சங்கக்காரவின் சாதனையை முறியடித்த கிரிஸ் கெயில்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார வைத்திருந்த…
கெயிலை அடுத்து சிறிது நேரத்திலேயே ஷாய் ஹோப்பின் விக்கெட் வெறும் 11 ஓட்டங்களுடன் பறிபோனது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இந்நேரத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் ஷிம்ரோன் ஹேட்மேயர் ஆகியோர் பொறுப்பான முறையில் துடுப்பாடி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இரண்டு வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களை பகிர்ந்ததோடு, இந்த இணைப்பாட்டத்திற்குள் நிகோலஸ் பூரன் ஒருநாள் போட்டிகளில் பெற்ற தனது கன்னி அரைச்சதத்தினை பதிவு செய்தார்.
இதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டம் ஷிம்ரோன் ஹெட்மேயரின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. ஹெட்மேயர் 48 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து அரைச்சதம் கடந்த நிலையில் இருந்த நிகோலஸ் பூரனும் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அவரின் விக்கெட்டை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஜொலிக்க தவறி ஆட்டமிழந்து சென்றனர்.
இதனால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் நிகோலஸ் பூரன் 78 பந்துகளில் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்க்க ஜோ ரூட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 213 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த ஜோ ரூட் சதம் பெற்று உதவினார்.
ஜோ ரூட்டின் சத உதவியுடன் இங்கிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் 213 ஓட்டங்களுடன் அடைந்தது.
உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு…
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த ஜோ ரூட் ஒருநாள் போட்டிகளில் பெற்ற 16ஆவது சதத்துடன், 94 பந்துகளில் 11 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். மேலும் இது ஜோ ரூட் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற இரண்டாவது சதமாகவும் அமைந்தது. ரூட் ஒருபுறமிருக்க ஜொன்னி பெயர்ஸ்டோவ் 45 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டங்களுடனும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக ஷன்னோன் கேப்ரியல் இங்கிலாந்து அணியில் பறிபோன 2 விக்கெட்டுகளையும் சுருட்டியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ள இங்கிலாந்து அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) மன்செஸ்டர் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.
இதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தோல்வியை பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் திங்கட்கிழமை டோன்டன் நகரில் வைத்து மோதவிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen
R
B
4s
6s
SR
Chris Gayle
c Jonny Bairstow b Liam Plunkett
36
41
5
1
87.80
Evin Lewis
b Chris Woakes
2
8
0
0
25.00
Shai Hope
lbw b Mark Wood
11
30
1
0
36.67
Nicholas Pooran
c Jos Buttler b Jofra Archer
63
78
3
1
80.77
Shimron Hetmyer
c & b Joe Root
39
48
4
0
81.25
Jason Holder
c & b Joe Root
9
10
0
1
90.00
Andre Russell
c Chris Woakes b Mark Wood
21
16
1
2
131.25
Carlos Brathwaite
c Jos Buttler b Jofra Archer
14
22
0
1
63.64
Sheldon Cottrell,
lbw b Jofra Archer
0
1
0
0
0.00
Oshane Thomas
not out
0
11
0
0
0.00
Shannon Gabriel
b Mark Wood
0
3
0
0
0.00
Extras
17 (b 0 , lb 5 , nb 0, w 12, pen 0)
Total
212/10 (44.4 Overs, RR: 4.75)
Fall of Wickets
1-4 (2.6) Evin Lewis, 2-54 (12.6) Chris Gayle, 3-55 (13.2) Shai Hope, 4-144 (29.5) Shimron Hetmyer, 5-156 (31.6) Jason Holder, 6-188 (36.2) Andre Russell, 7-202 (39.4) Nicholas Pooran, 8-202 (39.5) Sheldon Cottrell,, 9-211 (43.4) Carlos Brathwaite, 10-212 (44.4) Shannon Gabriel,
Bowling
O
M
R
W
Econ
Chris Woakes
5
2
16
1
3.20
Jofra Archer
9
1
30
3
3.33
Liam Plunkett
5
0
30
1
6.00
Mark Wood
6.4
0
18
3
2.81
Ben Stokes
4
0
25
0
6.25
Adil Rashid
10
0
61
0
6.10
Joe Root
5
0
27
2
5.40
Batsmen
R
B
4s
6s
SR
Jonny Bairstow
c Carlos Brathwaite b Shannon Gabriel
45
46
7
0
97.83
Joe Root
not out
100
94
11
0
106.38
Chris Woakes
c Fabian Allen b Shannon Gabriel
40
54
4
0
74.07
Ben Stokes
not out
10
6
2
0
166.67
Extras
18 (b 0 , lb 2 , nb 1, w 15, pen 0)
Total
213/2 (33.1 Overs, RR: 6.42)
Fall of Wickets
1-95 (14.4) Jonny Bairstow, 2-199 (31.5) Chris Woakes,
Bowling
O
M
R
W
Econ
Sheldon Cottrell,
3
0
17
0
5.67
Oshane Thomas
6
0
43
0
7.17
Shannon Gabriel
7
0
49
2
7.00
Andre Russell
2
0
14
0
7.00
Jason Holder
5.1
0
31
0
6.08
Carlos Brathwaite
5
0
35
0
7.00
Chris Gayle
5
0
22
0
4.40
முடிவு – இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி