ஜேசன் ரோய்க்கு போட்டித்தடை

630

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய்க்கு, சர்வதேச போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கான தடையும் 2,500 பவுண்டுகள் (இலங்கை நாணயப்படி சுமார் 0.95 மில்லியன் ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

>> WATCH – புதிய பயிற்சியாளரின் கீழ் ஆசிய கிண்ணத்தை வெல்லுமா இலங்கை? |Sports RoundUp – Epi 199

ஜேசன் ரோய் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏற்றுக் கொண்டிருப்பதோடு கிரிக்கெட்டிற்கு கலகம் விளைவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் (ECB) விதிமுறைகளை மீறியதனை ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இது மாதிரியான தவறுகளை அடுத்த 12 மாதங்களுக்குள் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஜேசன் ரோய்க்கு மீண்டும் தடைவிதிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் ஜேசன் ரோய் மேற்கொண்ட தவறுவகள் குறித்து எந்த தகவலும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை மூலம் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மகளிர் T20I போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்று பஹ்ரைன் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரினை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக மாறிய ஜேசன் ரோய் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் பொருட்டு, இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் அடங்கலாக அண்மையில் நடந்த அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<