இங்கிலாந்து அணி 311 ஓட்டங்கள் முன்னிலையில்

216
Eng vs Pak 4th Day
©Getty Images

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சுஹைல் கானின் அபாரப் பந்து வீச்சால் 297 ஓட்டங்களுக்கு சுருண்டது. சுஹைல் கான் 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பேலன்ஸ் 70 ஓட்டங்களையும், மொயீன் அலி 63 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.  சர்பிராஸ் அஹமத் 46 ஓட்டங்களை  எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரைத் தவிர அசார் அலியின் சதம் (139) மற்றும் சமி அஸ்லாமின் (82) அரைச்சதம் மற்றும் மிஸ்பா உல் ஹக் 56 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளும், எண்டர்சன் 2 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து  அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. இதன் படி தமது 2ஆவது இனிங்ஸில் ஆடி வந்த  இங்கிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 120 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் எலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் மறுமுனையில் எலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.

பின்னர் நேற்று 4ஆவது நாள் தொடர்ந்தது.  இதில் தமது இனிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியைவிட 311 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொனி பெயர்ஸ்டோ ஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களையும், மொயீன் அலி  ஆட்டம் இழக்காமல் 60 ஓட்டங்களையும் பெற்று ஆடுகளத்தில் இருந்தனர். இவர்களைத் தவிர எலஸ்டயர் குக்  66 ஓட்டங்களையும், எலெக்ஸ் ஹேல்ஸ் 54 ஓட்டங்களையும் மற்றும் ஜோ  ரூட் 62 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்துவீச்சில் யசீர் ஷா மற்றும் முஹமத் ஆமிர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தி இருந்தார்கள்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 297/10

கெரி பேலன்ஸ் 70, மொயின் அலி 63, எலாஸ்டயர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ 39, சுஹைல் கான் 96/5, ரஹத் அலி 83/2, முஹமத் அமீர் 53/2

பாகிஸ்தான் – 400/10

அசார் அலி 139, சமி அஸ்லம் 82, மிஸ்பா உல் ஹக் 56, சர்பிராஸ் அஹமத் 46*, ஸ்டூவர்ட் ப்ரோட் 83/3, க்றிஸ் வோக்ஸ் 79/3, ஜேம்ஸ் எண்டர்சன் 54/2

இங்கிலாந்து – 414/5

ஜொனி பெயர்ஸ்டோ  82*,  மொயீன் அலி  60*, எலஸ்டயர் குக்  66, எலெக்ஸ் ஹேல்ஸ் 54, ஜோ  ரூட் 62, யசீர் ஷா 152/2, முஹமத் ஆமிர் 73/2

இங்கிலாந்து அணி 5 விக்கட்டுகள் கையிருப்பில் 311 ஓட்டங்கள் முன்னிலையில்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்