சுதந்திர கிண்ண அரையிறுதியில் தென் மாகாணம்

636

சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில், 7 ஆம் வாரத்திற்காக இடம்பெற்ற போட்டிகளில் கிழக்கு மற்றும் தென் மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியும், மேல் மற்றும் வடக்கு மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியும் சமநிலையில் நிறைவு பெற்றன.

வடக்கு எதிர் மேல்

ரத்னபுர சீவலி மைதானத்தில் இடம்பெற்ற முதல் போட்டியில், வட மாகாண அணி மேல் மாகாண அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமநிலை செய்தது.

வட மாகாண அணி ஏற்கனவே இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தங்கள் குழாத்தில் உள்ள ஏனைய வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பளித்தது. மறுமுனையில் மேல் மாகாண அணி இப்போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்று , அடுத்த போட்டியில் தென் மாகாண அணி கிழக்கு மாகாண அணியிடம் தோல்வி அடைந்தால் மாத்திரமே, மேல் மாகாண அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தன.

மேல் மாகாணத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கிழக்கு வீரர்கள்; தென் மாகாணம் இலகு வெற்றி

போட்டியின் 10 ஆவது நிமிடத்தில், சலன பிரேமரத்ன கொடுத்த பந்து பரிமாற்றத்தை வட மாகாண கோல் காப்பாளர் சதுசன் ஒழுங்காக பிடிக்க தவறவிட , மேல் மாகாண அணிக்கு முதலாவது கோல் கிடைத்தது. தொடர்ந்து மேல் மாகாண அணி வீரர்கள் முதலாம் பாதியில் கோல் அடிக்க முயற்சித்த போதும் அவர்களால் அடிக்க முடியாமல் போனது.

இரண்டாம் பாதியில் மேல் மாகாண அணி தற்காப்பு ஆட்டத்தை விளையாட 80 ஆவது நிமிடத்தில் கீதனின் ஹெடர் மூலம் வட மாகாண அணி முதலாவது கோலைப் பெற்று போட்டியை சமநிலை செய்தது.

WATCH – விறுவிறுப்பின் உச்சத்தில் சுதந்திர கிண்ண தொடர்| FOOTBALL ULAGAM

தெற்கு எதிர் கிழக்கு

கேகாலையில் இடம்பெற்ற இப்போட்டியில் தென் மாகாண அணிக்கு எதிரான ஆட்டத்தை கிழக்கு மாகாண அணி எவ்வித கோல்களும் அடிக்காமல் சமநிலை செய்தது.

தொடரும் சபரகமுவ அணியின் வெற்றிநடை; வட மாகாணத்தை மீட்ட நிதர்சன்

முதலாம் பாதியில், இரு அணிகளும் எந்த விதமான கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்தாலும், போட்டியின் அதிக நேரம் பந்தை தென் மாகாண அணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

எனினும் இரண்டாம் பாதியில், கிழக்கு மாகாண அணி அதிக கோலடிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திய போதும் அவர்களால் கோல்களை அடிக்க முடியாமல் போனது. மறுபக்கம் தென் மாகாண அணி எந்தவொரு கோலுக்கான முயற்சியையும் செய்யவில்லை.

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<