இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடும் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணைக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>>அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கை வம்சாவளி இளம் கிரிக்கெட் வீரர்
தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், IPL தொடரில் விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார்.
எனினும் இந்த ஆண்டு IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு முதன்முறையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து அசத்தியிருந்தது.
எனவே பெங்களூர் மற்றும் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணயின் பணிப்பாளருமான மோ போபட் தினேஷ் கார்த்திக்கை லண்டன் ஸ்பிரிட் அணியிலும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















