நியூசிலாந்துடனான போட்டியில் புதிய உலக சாதனை படைத்த டோனி

1023

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று (09) ஆரம்பமான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனி, 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய உலகின் 10ஆவது வீரராகவும், இந்தியாவின் 2ஆவது வீரராகவும் புதிய சாதனை படைத்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் நேற்று மென்செஸ்டர் ஓல்ட் டிராபேர்ட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

இலங்கைக்கு இம்மாத பிற்பகுதியில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள…

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்களை எடுத்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாநியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக இன்று (10) தொடரும் என அறிவிக்கப்பட்டது

இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350ஆவது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய உலகின் 10ஆவது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்

இதுவரை 349 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி, அதில், 346 போட்டிகளில் இந்தியாவிற்காகவும், 3 போட்டிகள் ஆசிய பதினொருவர் அணிக்காகவும் விளையாடி உள்ளார்

மேலும், இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றார். குறிப்பாக, ஒரு விக்கெட் காப்பாளராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையையும் டோனி படைத்துள்ளார்

உலகக் கிண்ண முதல் அரையிறுதி நாளை தொடரும்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார, 360 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் 44 போட்டிகளில் விக்கெட் காப்பாளராக விளையாடவில்லை

அதுமட்டுமின்றி, 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் தலைவராகச் செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்தார்

இதேநேரம், அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (463) முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மஹேல ஜயவர்தன (448), சனத் ஜயசூரியா (445), குமார் சங்கக்கார (404), சஹீட் அப்ரிடி (398), இன்சமாம் உல் ஹக் (378), ரிக்கி பொண்டிங் (375), வசீம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350) ஆகியோர் உள்ளனர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<