தம்மிக பிரசாத்துக்கு அமெரிக்க கிரிக்கெட்டில் முக்கிய பதவி

13
Dhammika Prasad

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் அமெரிக்க கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்; நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கை மற்றும இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு இந்த இரண்டு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

42 வயதான வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான தம்மிக பிரசாத், 2006 முதல் 2015 வரை இலங்கைக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20I சர்வதேச போட்டி என மொத்தம் 50 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அத்துடன், 2021இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற, நேபாளம் உள்ளிட்ட ஒருசில சர்வதேச அணிகளின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், 2026 T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க கிரிக்கெட் அணி ஜனவரி 10ஆம் திகதி இலங்கை வருகிறது. T20 உலகக் கிண்ணத்திற்கான முன் ஆயத்தமாக தங்கள் பயிற்சிகளை இலங்கையில் இருந்து தொடங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

T20 உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும் வகையில் குழு A இல் இடம்பெற்றுள்ள அமெரிக்கா அணி தமது முதல் போட்டியில் பெப்ரவரி 7ஆம் திகதி இந்தியாவை சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியானது எதிராக மும்பை, வாங்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<