பந்துவீச்சை பரிசோதிக்க துடுப்பாட்டத்தை இடைநிறுத்திய இலங்கை

1151

கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தங்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, பந்துவீச்சை பரிசோதிக்கும் வகையில் 176 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்ற இலங்கை

அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை கிரிக்கெட் ….

கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் பயிற்சிப் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.  இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணி 316 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நேற்று, ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய தினம் தங்களுடைய ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னே சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். இவர்கள் இருவரும் 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து 32 ஓட்டங்களை பெற்றிருந்த லஹிரு திரிமான்னேவும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவர்களின் ஆட்டமிழப்புகளை தொடர்ந்து நிதானமாக துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 32 ஓட்டங்களை பெற்ற அணித் தலைவர் தினேஷ் சந்திமால், மெர்னஸ் லெபுச்செங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சதீர சமரவிக்ரம 11 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 14 ஓட்டங்களுடனும் பெவிலியன் திரும்பினர். எனினும், நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரொஷேன் சில்வா அணியின் ஓட்ட எண்ணிக்கையை மெதுவாக நகர்த்தினார். இவருடன் இணைந்து நிரோஷன் டிக்வெல்ல துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார். எனினும், இலங்கை அணி தங்களுடைய பந்துவீச்சினை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில், 176 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரவு உணவு இடைவேளையின் போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

முக்கிய வீரரை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான ….

இதில், இலங்கை அணி சார்பில் ரொஷேன் சில்வா 36* ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 4* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணியின் பந்துவீச்சில், மெர்னஸ் லெபுச்செங் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்தை பொருத்தவரை, நேற்றைய ஆட்டத்தின் போது உபாதைக்குள்ளாகிய இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் இன்றைய தினம் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.

இதன் பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 239 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது. இதில் மெர்னஸ் லெபுச்செங் 33* ஓட்டங்களையும், குர்டிஸ் பெட்டர்சன் 30* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்துள்ளனர். பந்துவீச்சில் கசுன் ராஜித மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

போட்டி சுருக்கம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<