வெற்றிளை சுவைத்த ஜுவன்டஸ், ரியல் மெட்ரிட் மற்றும் PSG

223

UEFA சம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுப்போட்டியின் குழுநிலைப் போட்டிகள் இறுதிக் கட்ட நிலையை அடைந்துள்ள வேளையில் 5வது வாரத்திற்கான போட்டிகளில் பல முன்னனி கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தின.

ரோமா எதிர் ரியல் மெட்ரிட்

ரோமா அணியுடன் இறுதியாக தனது சொந்த அரங்கில் நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், G குழுவில் போட்டியிடும் இவ்விரு அணிகளுக்குமிடையில் இவ்வாரம் ரோமா அணியின் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் அணி வெற்றியை சுவீகரித்தது.

போட்டியின் முதல் 30 நிமிடங்களில் இரு அணிகளும் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்தாடுவதிலே கூடுதல் கவனம் செலுத்தின.

எனினும், ரோமா அணி முதல் பாதியின் இறுதிக் கட்டங்களில் பல சிறந்த வாய்ப்புக்களை பெற்றது.

குறிப்பாக, முன்கள வீரர் அன்டர் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் எவ்வித பின்கள வீரருமில்லாத நிலையில் தனக்கு கிடைத்த பந்தை கோலை நோக்கி உதைந்த போதும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

முதல் பாதி: ரோமா 0 – 0 ரியல் மெட்ரிட்  

முதல் பாதியில் சோபிக்க தவறிய ரியல் மெட்ரிட் அணியினர் இரண்டாம் பாதியில் போட்டியை முழுமையாக ஆக்கிரமித்தனர்.

இதன் பலனாக எதிரணியின் பின்கள வீரர்கள் பந்து பரிமாற்றத்தில் விட்ட தவறை பயன்படுத்தி ரியல் மெட்ரிட் முன்கள வீரர் க்ரெத் பெய்ல் மூலம் போட்டியின் 47 ஆம் நிமிடத்தில் அவ்வணி முதல் கோலை பெற்றது.

ரோமா அணி போட்டியை சமப்படுத்த முயன்ற போதும் லுகாஸ் வஸ்காஸ் மூலம் 59 ஆம் நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி பெற்ற இரண்டாம் கோலின் மூலம் ரோமா அணி போட்டியில் மேலும் பின்னடைவை சந்தித்தது.

Sri Lanka demolish Singapore in Asian Championship final

Sri Lanka brushed aside hosts Singapore ….

கோல்களை பெறுவதற்கான மேலும் பல வாய்ப்புக்கள் இரு அணிகளுக்கும் கிடைக்கப் பெற்றும் அவை வீணடிக்கப்படவே ரியல் மெட்ரிட் அணி போட்டியில் வெற்றி பெற்றது.

எனினும், அடுத்த கட்ட போட்டிகளுக்காக இவ்விரு அணிகளும் G குழுவில் இருந்து தெரிவாகியுள்ளன.

முழுநேரம்: ரோமா 0 – 2 ரியல் மெட்ரிட்

ஜுவன்டஸ் எதிர் வெலன்ஸியா

கடந்த மாதம் வெலன்ஸியா அணியின் அரங்கில் இப்பருவகாலத்திற்கான UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளுக்காக நடைபெற்ற மோதலில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஜுவன்டஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.   

இந்நிலையில் தமது அணியின் அரங்கில் (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜுவன்டஸ் அணி இரண்டாம் பாதியில் பெற்ற கோலினால் ஆட்டத்தை வென்றது.

பல வாய்ப்புக்களை பெற்ற ஜுவன்டஸ் அணிக்கு போட்டியின் 58ஆம் நிமிடத்தில் வலது மூலையிலிருந்து ரொனால்டோ மூலம் தரை வழியாக உள்ளனுப்பப்பட்ட பந்தை மன்ட்ஸஜகிச் கோலாக்கினார்.

முழுநேரம்: ஜுவன்டஸ் 1 – 0 வெலன்ஸியா

PSG எதிர் லிவர்பூல்  

C குழுவில் போட்டியிடும் இவ்விரு அணிகளுக்குமிடையில் அன்பீய்ல்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்த நிலையில் (29) மீண்டும் இவ்விரு அணிகளும் பரிஸ் செய்ண்ட் ஜேர்மன் (PSG) அணியின் அரங்கில் பலப்பரீட்சை நடாத்தின.

முதல் பாதியில் வெற்றிகரமான பல வாய்ப்புக்களை பெற்ற PSG அணி ஜீவான் பெர்னாட் மற்றும் நெய்மார் மூலம் முறையே போட்டியின் 13ஆம் மற்றும் 37 ஆம் நிமிடங்களில் இரு கோல்களை பெற்றன.

எதிர்த்தாடிய லிவர்பூல் அணிக்கு போட்டியின் 45ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பின் மூலம் ஜேம்ஸ் மில்னர் முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: PSG 2 – 1 லிவர்பூல்

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தமக்கான வாய்ப்புக்களை சிறந்த முறையில் பெற்றபோதும் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர்களின் திறமையால் அவ்வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட்டன.

Sri Lanka demolish Singapore in Asian Championship final

Sri Lanka brushed aside hosts Singapore …

இப்போட்டியில் PSG அணி வெற்றி பெற்றதன் மூலம் C குழுவில் நடைபெறும் இறுதிக் கட்டப் போட்டிகளின் மூலமே அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் தெரிவாகும் நிலை உருவாகியுள்ளது.   

முழுநேரம்: PSG 2 – 1 லிவர்பூல்

டொடன்ஹாம் எதிர் இன்டர்மிலான்

B குழுவில் போட்டியிடும் முன்னணி கழகங்களான இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் எவ்வித கோலும் பெறப்படாத போதும் டொடன்ஹாம் அணி வீரர்களால் பல வெற்றிகரமான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன.

எனினும், எதிரணியின் பின்கள வீரர்களை தாண்டி எவ்வித கோலும் பெற முடியவில்லை.

முதல் பாதி: டொடன்ஹாம் 0 – 0 இன்டர்மிலான்

இரண்டாம் பாதியின் 80 ஆம் நிமிடத்தில் கிரிஸ்டியன் எரிக்ஸன் மூலம் பெறபட்ட கோலினால் டொடன்ஹாம் அணி இப்போட்டியில் வெற்றியை தனதாக்கியது.  

மேலும், இவ்வெற்றியின் மூலம் B குழுவில் அடுத்த கட்ட போட்டிகளுக்காக தெரிவில் போட்டித் தன்மை அதிகரித்துள்ளது.

முழுநேரம்: டொடன்ஹாம் 1 – 0 இன்டர்மிலான்