கடந்த இரண்டு வருடங்களிலும் ரக்பி லீக் தொடரின் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்ட CH&FC அணி இம்முறை மூன்றாவது தடவையாக இறுதி இடத்திற்குத் தள்ளப்படும் அபாயத்தில் இவ்வருடப் போட்டிகளுக்குக் களமிறங்குகின்றது.

CH & FC ரக்பி கழக பகுதி

முன்னைய ஆண்டுகள்

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இறுதி நிலையில் சுற்றுப் போட்டியை முடித்துக் கொண்ட CH&FC அணி, புதிய பயிற்றுவிப்பாளரின் வருகையுடன் இவ்வருடம் சிறப்பான திறமையை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் மிகவும் மோசமான ஆட்டத்தின் காரணமாக தாம் விளையாடிய 14 போட்டிகளிலும் இவ்வணி தோல்வியை தழுவியிருந்தது. இலங்கையில் ரக்பி விளையாட்டில் ஈடுபட்ட முதல் கழகம் என்ற வகையில், CH&FC நீண்ட, வளமான வரலாற்றை கொண்டுள்ளது. இலங்கை அணியை பிரதிநிதித்துவப் படுத்திய பல வீரர்களையும் இக்கழகம் உருவாக்கித் தந்துள்ளது. இந்நிலையில் இவ்வணி மீண்டும் தமது முன்னைய நிலைக்கு படிப்படியாக முன்னேற எதிர்பார்த்துள்ளது.

குழாம்

முன்னாள் கடற்படை வீரர் லக்கித் பெரேரா கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பயன்படுத்தி, இளம் வீரர்களை உள்ளடக்கிய தமது அணியை சிறப்பான நிலைக்கு இட்டுச் செல்ல காத்திருக்கின்றார்.

பாடசாலை மட்டத்தில் ஸாஹிரா கல்லூரிக்கும் பின்னர் அமெரிக்க கால்பந்தாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்ட இன்ஸாம் இர்பான், தனது 6 அடி உயரத்தினதும் 120 kg எடையினதும் உதவியுடன் அணியின் முன்வரிசைக்கு பலம் சேர்க்கவுள்ளார். சிரேஷ்ட வீரர் மொஹமட் ரிப்கான் அவருடன் முன்வரிசை நிலையில் விளையாடவுள்ள மற்றைய உருவராவார்.

15ஆம் இலக்க (புல் பெக்) நிலையில் விளையாடவுள்ள ஜனித் சந்திமால் பின்வரிசையிலிருந்தபடி அணியை நெறிப்படுத்தவுள்ளார். கடந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய இவர், போட்டியில் தீர்மானங்கள் எடுப்பதிலும் உதைகளை குறி தவறாது உதைப்பதிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

முன்னாள் கடற்படை மற்றும் இராணுவ அணி வீரர் உதார மதுஷங்க பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற மற்றுமொரு வீரராவார். முன்னர் ஹெவலொக்ஸ் அணி சார்பாக விளையாடிய ஷானக பொன்சேகா அணித்தலைவராக கடமையாற்றவுள்ளதுடன், இவர் 12ஆம் அல்லது 13 ஆம் இலக்க (சென்டர்) நிலையில் களமிறங்கவுள்ளார்.

இளம் வீரர்கள்

இவ்வருடம் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் அணித்தலைவராக விளையாடி தனி ஒருவராக அணிக்கு பெருமை சேர்த்த அஷ்ரப் முஸ்மி இம்முறை கழக மட்டத்தில் முதல் முறையாகக் கால் பதிக்கவுள்ளார். இவரைத் தவிர விஷ்வ தினெத் (தர்ஸ்டன் கல்லூரி), உதார லக்ஷான் (டட்லி சேனநாயக்க கல்லூரி), ஆகாஷ் வீரகோன் (நுகேகொட புனித ஜோன்ஸ் கல்லூரி) மற்றும் டில்ஷான் பொன்சேகா (புனித பேதுரு கல்லூரி) போன்ற இளம் வீரர்களும் அணியில் இடமொன்றை பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றனர்.

Dialog Rugby League Hub

பயிற்றுவிப்பாளர்கள்

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் அனுபவமிக்க முன்னாள் ரக்பி வீரர் டுலகீஸ் டவிடா (லகா) அணியை அணியின் ஆலோசகராகவும், நாமல் ராஜபக்ஷ அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்று செயற்படுகின்றார். இவர்களின் வழிகாட்டல் இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாக அமைகின்ற போதிலும், கடந்த வருடம் மூன்று சம்பியன்ஷிப் போட்டிகளையும் வெற்றி கொண்ட கண்டி கழகத்துடன் இடம்பெறவுள்ள முதல் போட்டி கடினமானதொன்றாக அமையப் போவதில் சந்தேகமில்லை.

எனினும் முன்னணி வீரர்களை கொண்டிராத நிலையில் இளம் வீரர்களைக் கொண்டு கடந்த வருடத்தை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இவ்வணிக்கு கடின சவாலாக அமைவது நிச்சயம்.

[a-team-showcase-vc ats_team_id=”2138661″]