கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு நியமனம்

Sri Lanka Cricket

139

இலங்கை கிரிக்கெட் சபைக்காக விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (06) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த இந்த அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளார்.

>> சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸின் ஆட்டமிழப்பு

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி செயற்படவுள்ளார். அதேநேரம் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான உலகக்கிண்ண பிரகாசிப்புகள், நிர்வாகக்குழுவின் செயற்பாடுகள் என்பவற்றை கருத்திற்கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக்குழுவொன்றை நேற்று நியமித்திருந்தார்.

எனினும் குறித்த இடைக்கால குழு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்காத நிலையில், அமைச்சரவை சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இடைக்கால குழு தொடர்பில் ஆராய விசேட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

                              >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<