இலங்கை தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு!

Zimbabwe tour of Sri Lanka 2025

174

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சிம்பாப்வே குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள சிம்பாப்வே குழாத்தில் ஓய்விலிருந்து திரும்பியிருக்கும் பிரெண்டன் டெய்லர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2021ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். 

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் புஜாரா

கிரைக் எர்வின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் சிக்கண்டர் ரஷா, சீன் வில்லியம்ஸ், ரிச்சர்ட் கிராவா மற்றும் வெஸ்லி மெதவரே போன்ற அனுபவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிம்பாப்வே குழாம் 

கிரைக் எர்வின் (தலைவர்), பிரைன் பென்னெட், ஜொனதன் கேம்பெல், பென் கரன், பிரெட் எவன்ஸ், ட்ரெவர் கிவண்டு, வெஸ்லி மெதவரே, கிலைவ் மடண்டே, எர்னஸ்ட் மசுகு, டொனி முன்யோங்கா, பிலெசிங் முஷரபாணி, ரிச்சர்ட் கிராவா, நெவ்மன்நியம்ஹுரி, சிக்கண்டர் ரஷா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<