இலங்கைத் தொடரினை முழுமையாக இழக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தலைவர்

Sri Lanka tour of England 2024

236
Sri Lanka tour of England 2024

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் தலைவரான பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து பாதியில் அழைக்கப்பட்ட கிரிஸ் வோக்ஸ்!<<

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்ற “The Hundred” கிரிக்கெட் தொடரில் நொதர்ன் சுபர்சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய சகலதுறை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கால் தசை உபாதைக்கு (Hamstring) முகம் கொடுத்திருந்தார் 

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள பென் ஸ்டோக்ஸ் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை முடிவுகள் அவரினால் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் முழுமையாக ஆட முடியாமல் போயிருப்பதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன 

அதேநேரம் பென் ஸ்டோக்ஸ் முழுமையாக உடல்நிலை தேறிய பின்னர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் அடுத்த ஒக்டோபர் மாதமே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

இங்கிலாந்து அணி  இம்மாதம் 21ஆம் திகதி இலங்கையுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் அறிவிக்காத போதிலும் இங்கிலாந்து அணியினை இலங்கைத் தொடரில் ஒல்லி போப் வழிநடாத்துவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<