ஷகிபின் சகலதுறையால் தொடரை சமன் செய்தது பங்களாதேஷ்

182

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி இன்று (20) நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஷாய் ஹோப்பின் அதிரடியில் பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் 60 ஓட்டங்களையும்  மஹ்மதுல்லாஹ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் முறையே 43 மற்றும் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர். மஹ்மதுல்லாஹ் மற்றும் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 91 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஓட்டங்களை தாண்டியது. பந்து வீச்சில் செல்டன் கொட்ரல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

212 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், கடந்த முதலாவது போட்டியில் அதிரடியாக 16 பந்துகளில் அரைச்சதம் பெற்ற ஷாய் ஹோப் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடியிருந்த போதும் அவரால் 36 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. அது தவிர ரோவ்மன் பவல் 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.  ஏனைய வீரர்களும் வேகமாக ஓட்டங்களை குவிக்க முனைந்ததன் விளைவாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் மற்றும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மற்றும் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதியுமான டி20 போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 211/4 (20) – லிடன் தாஸ் 60, மஹ்மதுல்லாஹ் 43*, ஷகிப் அல் ஹஸன் 42*, செல்டன் கொட்ரல் 38/2

மேற்கிந்திய தீவுகள் – 175 (19.2) – ரோவ்மன் பவல் 50, ஷாய் ஹோப் 36, கீமோ போல் 29, ஷகிப் அல் ஹஸன் 21/5, முஸ்தபிசுர் ரஹ்மான் 50/2

முடிவு – பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<