Home Tamil T20I தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ்

T20I தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ்

Bangladesh tour of Sri Lanka 2025 

141
SLvBAN

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டியில் பங்களாதேஷ் இலங்கையினை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதோடு, தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

இன்னும் இந்த தொடர் வெற்றி மூலம் பங்களாதேஷ் அணியானது இலங்கை மண்ணில் வரலாற்றில் முதல் தடவையாக இருதரப்பு தொடர் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடர் முன்னதாக 1-1 என சமநிலையடைந்த நிலையில், தீர்மானம் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். அதன்படி போட்டியில் துடுப்பாடத் தொடங்கிய இலங்கை அணியானது தொடக்கத்தில் இருந்தே தடுமாறியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

>> நுவனிது, தினுஷவின் சதங்களுடன் முடிவடைந்த முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக பெதும் நிஸ்ஸங்க 39 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுக்க, தசுன் ஷானக்க 25 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் பந்துவீச்சில் மஹேதி ஹஸன் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்ந்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் தொடக்கத்தில் சிறு தடுமாற்றத்தினை முகம் கொடுத்த போதும் தன்சித் ஹஸனின் அபார அரைச்சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

தன்சித் ஹஸன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை பந்துவீச்சில் நுவான் துஷார மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அது வீணாகியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக மஹேதி ஹஸன் தெரிவானார். தொடர் நாயகன் விருது லிடன் தாஸிற்கு வழங்கப்பட்டது.

ஸ்கோர் விபரம்

Result
Sri Lanka
132/7 (20)
Bangladesh
133/2 (16.3)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b Mahedi Hasan 46 39 4 0 117.95
Kusal Mendis c Towhid Hridoy b Shoriful Islam 6 4 1 0 150.00
Kusal Perera c Tanzid Hasan b Mahedi Hasan 0 1 0 0 0.00
Dinesh Chandimal c Jaker Ali b Mahedi Hasan 4 5 0 0 80.00
Charith Asalanka b Mahedi Hasan 3 8 0 0 37.50
Kamindu Mendis c Tanzim Hasan Sakib b Shamim Hossain 21 15 1 1 140.00
Dasun Shanaka not out 35 25 2 0 140.00
Jeffery Vandersay c Tanzim Hasan Sakib b Mustafizur Rahman 7 14 0 0 50.00
Maheesh Theekshana not out 6 9 0 0 66.67
Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 132/7 (20 Overs, RR: 6.6)
Bowling O M R W Econ
Shoriful Islam 4 0 50 1 12.50
Mahedi Hasan 4 1 11 4 2.75
Mustafizur Rahman 4 0 17 1 4.25
Tanzim Hasan Sakib 2 0 23 0 11.50
Shamim Hossain 2 0 10 1 5.00
Rishad Hossain 4 0 20 0 5.00

Batsmen R B 4s 6s SR
Parvez Hossain Emon lbw b Nuwan Thushara 0 1 0 0 0.00
Tanzid Hasan not out 73 47 1 6 155.32
Liton Das c Kusal Perera b Kamindu Mendis 32 26 2 1 123.08
Towhid Hridoy not out 27 25 1 1 108.00
Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 133/2 (16.3 Overs, RR: 8.06)
Bowling O M R W Econ
Nuwan Thushara 3 0 25 1 8.33
Binura Fernando 2 0 11 0 5.50
Maheesh Theekshana 3.3 0 30 0 9.09
Charith Asalanka 1 0 16 0 16.00
Jeffery Vandersay 4 0 29 0 7.25
Kamindu Mendis 3 0 21 1 7.00

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<