அஷாம் கானின் உபாதை எப்படி?

Lanka Premier League 2022

1201
Azam Khan is fine now

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் அஷாம் கான் மீது பந்து தாக்கியிருந்தது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் 16வது ஓவரை நுவான் பிரதீப் வீசியிருந்தார். இதன்போது மிதவேக பந்து ஒன்றை நுவான் பிரதீப் வீச, இரண்டாவது பௌண்ஸின் பின்னர் அஷாம் கானின் தலையில் பந்து தாக்கியது.

>> இறுதிவரை போராடியும் மெதிவ்ஸின் போராட்டம் வீண்

உடனடியாக வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சையளித்ததுடன், உடனடியாக அம்புயூலன்ஸ் மூலமாக அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செள்ளப்பட்டார்.

வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு தீவிரமான உபாதை இல்லையென கோல் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அஷாம் உபாதைக்கு முகங்கொடுத்து திரும்பியதால், லஹிரு உதார அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார். இந்தப்போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<