பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தை பிற்போட்டுள்ள ஆஸி. கிரிக்கெட் அணி

165
(Photo by Clive Mason/Getty Images)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பங்களாதேஷுடன் விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டின் (2020) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ICC யின் தகுதியிழப்பு புள்ளி மற்றும் எச்சரிக்கையைப் பெற்ற கோஹ்லி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க……

ஜ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ள செய்தியினை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) நேற்று (23) உறுதி செய்துள்ளது.  

அவுஸ்திரேலிய – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் எடுத்த முடிவுகளுக்கு அமைவாகவே, இந்த டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

”எதிர்கால சுற்றுப் பயண நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, எங்களுக்கு அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நடாத்த வேண்டி இருந்தது. எனினும், தற்போது குறித்த தொடர் 2020ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது.” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான அக்ரம் கான் தெரிவித்திருந்தார். 

இதேநேரம், அவுஸ்திரேலிய – பங்களாதேஷ் அணிகள் இடையில் ஒக்டோபர் மாதம் இடம்பெறவிருந்த T20 தொடரும் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் நடைபெறும் வகையில் பிற்போடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கின்றது.

இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் நாம் அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்றில் விளையாடுவதாக இருந்தது. எனினும், இப்போது 2021ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முன்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, எம்முடன் (பங்களாதேஷ்) மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட்  தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். எனினும், இந்த T20 தொடரின் திகதிகள் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.” என அக்ரம் கான் மேலும் பேசியிருந்தார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியை இந்த ஆண்டின் நவம்பர் மாதம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஆரம்பம் செய்கின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<