இந்திய அணிக்கெதிரான ஆஸி. குழாம் அறிவிப்பு

484
cricket Australia

இந்திய அணியுடான இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் குழாம் இன்று (07) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வருட இடைவெளியின் பின்னர் ஒரு வீரரும், ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுக வீரராக ஒருவரும் இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய – அவுஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணையில் மாற்றம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகையை ….

உலகக் கிண்ண போட்டிகளுக்கு இன்னும் சில மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் இரு தரப்பு தொடர்கள் மூலம் பலத்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.  

அந்த அடிப்படையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளான இரு டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.   

குறித்த இரண்டு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய அணியின் 16 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ட்ரேவர் ஹொஹ்னெஸினால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

பெயரிடப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குமாழில், இறுதியாக ஆஸி. அணி சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்த்தாடிய குமாழிலிருந்து அதிரடியாக பல மாற்றங்களை செய்துள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக இந்திய அணியுடன் இடம்பெற்ற டி20 தொடரை சமப்படுத்தியிருந்த அதேவேளை, ஒருநாள் தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியுடனான தொடரில் வேகப்பந்துவீச்சில் மிரட்டியிருந்த மிட்செல் ஸ்டாக், இலங்கை அணியுடன் நடைபெற்ற 2ஆவது போட்டியின் பின்னர் உபாதைக்குள்ளாகியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்த்தாடும் குழாமில் இருந்து ஸ்டார்க் விலகியுள்ளார். அத்துடன் உபாதைக்குள்ளாகியிருக்கும் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான ஜொஸ் ஹெஸில்வூடும் குறித்த குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.   

மார்ஷ் சகோதரர்களில் ஒருவரான சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு, ஷோன் மார்ஷ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், பீட்டர் சிடில் மற்றும் பில்லி ஸ்டென்லேக் ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டடுள்ளனர்.   

வேகப்பந்துவீச்சு வெற்றிடத்தை நிரப்புவதற்காக பிக்பேஷ் லீக் தொடரில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய கேன் ரிச்சட்சன் ஒரு வருட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டள்ளார். மேலும், வேகப்பந்துவீச்சில் நதன் கூட்டர் நெய்ல், ஜெய் ரிச்சட்சன், ஜெசன் ப்ரென்ட்ரொப், பெட் கம்மின்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரும் பகுதிநேர பந்துவீச்சாளருமான அஸ்ட்ன் டேர்னர் பிக்பேஷ் தொடரில் பிரகாசித்ததன் மூலமாக ஒருநாள் குழாமிற்கு அறிமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துடனான முதல் டி-20 போட்டியில் இந்தியாவுக்கு படுதோல்வி

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ….

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவராக வழமை போன்று அரோன் பிஞ்ச் செயற்படுகின்றார். இரு தொடர்களுக்குமான குழாமாக குறித்த குழாம் பெயரிடப்பட்டுள்ளதன் காரணமாக அலெக்ஸ் கெரி மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகிய இரு வீரர்கள் அணியின் உபதலைவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பெயரிடப்பட்ட அவுஸ்திரேலிய குழாம்

அரோன் பிஞ்ச் (அணித் தலைவர்), அலெக்ஸ் கெரி (உபதலைவர்), பெட் கம்மின்ஸ் (உபதலைவர்), உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், பீட்டர் ஹேன்ஸ்கொம்ப், கிலேன் மெக்ஸ்வெல், அஸ்ட்ன் டேர்னர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நதன் கூட்டர் நெய்ல், ஜெய் ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன், ஜெசன் ப்ரென்ட்ரொப், நதன் லயன், அடம் ஸம்பா, டார்ஸி ஷோர்ட்   

போட்டி அட்டவணை

  • 24 பெப்ரவரிமுதல் டி20 சர்வதேச போட்டிவிசாகப்பட்டினம்
  • 27 பெப்ரவரிஇரண்டாவது டி20 சர்வதேச போட்டிபெங்களூர்
  • 02 மார்ச்முதல் ஒருநாள் சர்வதேச போட்டிஹைதராபாத்
  • 05 மார்ச்இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டிநக்பூர்
  • 08 மார்ச்மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிரஞ்சி
  • 10 மார்ச்நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டிமொஹாலி
  • 13 மார்ச்ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டிடெல்லி    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<