ஆசிய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி

Asian Games 2023

497

சீனாவின் ஹோங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவின் T20 அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

காலிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

உள்ளூர் லீக் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மலிந்த புஷ்பகுமார

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியின் ஆரம்பம் முதல் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்து விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் பந்துவீசி 75/9 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியது.

பாகிஸ்தான் அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஷவால் சுல்பிகார் 16 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, முனீபா அலி 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் பந்துவீச்சில் உதேசிகா பிரபோதனி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கவீஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் நிலக்ஷி டி சில்வா ஆகியோரின் பிரகாசிப்புகளின் உதவியுடன் 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

ஹர்ஷிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டதுடன், பந்தவீச்சில் சடியா இக்பால் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை நாளைய தினம் (25) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<