ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Asia Cup 2023

732

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 30ம் திகதி முதல் செப்டம்பர் 17ம் திகதிவரை ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறவுள்ளது.

>>இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணிக்காக போராடிய தனன்ஞய டி சில்வா

தொடருக்கான உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகளை நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் சபை ஒப்புதல் அளித்திருந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என அறிவித்த காரணத்தால், போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன.

அதன்படி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் லாஹூரில் முதல் போட்டி நடைபெறவுள்ளதுடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 31ம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

மொத்தமாக 13 போட்டிகள் ஆசியக்கிண்ணத் தொடரில் நடைபெறவுள்ளதுடன், 9 போட்டிகள் இலங்கையிலும் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறவுள்ளன. பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் முல்தானில் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இலங்கையில் கண்டி-பல்லேகலை மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

>>WATCH – உலகக் கிண்ண தகுதிகாண் சவாலை கடந்த இலங்கை | Cricket Galatta Epi 70

இதில் லீக் போட்டிகள் கண்டி-பல்லேகலை மைதானத்திலும், சுபர் 4 சுற்று (Super Four) மற்றும் இறுதிப்போட்டி என்பன கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

அதேநேரம் அதிகம் பேசப்பட்டுவரும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2ம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • ஆகஸ்ட் 30 – பாகிஸ்தான் எதிர் நேபாளம் (முல்தான்)
  • ஆகஸ்ட் 31 – இலங்கை எதிர் பங்களாதேஷ் (கண்டி)
  • செப்டம்பர் 2 – பாகிஸ்தான் எதிர் இந்தியா (கண்டி)
  • செப்டம்பர் 3 – பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் (லாஹூர்)
  • செப்டம்பர் 4 – இந்தியா எதிர் நேபாளம் (கண்டி)
  • செப்டம்பர் 5 – இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் (லாஹூர்)
  • செப்டம்பர் 6 – A1 v B2 (லாஹூர்)
  • செப்டம்பர் 9 – B1 v B2 (கொழும்பு)
  • செப்டம்பர் 10 – A1 v A2 (கொழும்பு)
  • செப்டம்பர் 12 – A2 v B1 (கொழும்பு)
  • செப்டம்பர் 14 – A1 v B1 (கொழும்பு)
  • செப்டம்பர் 15 – A2 v B2 (கொழும்பு)
  • செப்டம்பர் 17 – இறுதிப்போட்டி – (கொழும்பு)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<