துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

Asia Cup 2022

748

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ண சுபர் 4 சுற்றின் முதல் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததுடன், அணியில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷிக்கு பதிலாக சமியுல்லாஹ் ஷின்வாரி இணைக்க்கப்பட்டிருந்தார்.

குழுநிலை மோதலுக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா?

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியை போன்று ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியிலும் பவர்-பிளேயில் வேகமாக ஓட்டங்களை குவித்தது.

ஹஷரதுல்லாஹ் ஷசாயின் விக்கெட் கைப்பற்றப்பட்ட போதும், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடினார். இவர் 8 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, பிடியெடுப்பு வாய்ப்பொன்று கிடைத்த போதும் தனுஷ்க குணதிலக்க பிடியெடுப்பை எடுத்து பௌண்டரி எல்லையை தொட்டிருந்தார்.

இதன் பின்னர் வேகமாக ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஓட்டங்களை குவிக்க, இப்ரஹீம் ஷர்டான் அவருக்கு பங்களிப்பை வழங்கினார். இதில் அரைச்சதத்தை கடந்த குர்பாஸ் 45 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, இப்ரஹீம் ஷர்டான் 40 ஓட்டங்களை பெற்றார்.

இவர்கள் இருவரின் இந்த துடுப்பாட்ட பங்களிப்புடன் மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி நகர்ந்த போதும், கடைசி 5 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை அணி கைப்பற்றியதால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

பவர்-பிளேயில் ரஷீட் கான் வீசிய கடைசி ஓவரில் குசல் மெண்டிஸ் 2 சிக்ஸர்களை விளாசி 17 ஓட்டங்களை பெற்றதிலிருந்து ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.

வேகமாக ஓட்டங்களை குவித்த குசல் மெண்டிஸ் 19 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் களமிறங்கிய சரித் அசலங்க தடுமாறியிருந்தாலும் தனுஷ்க குணதிலக்க சிறந்த பங்களிப்பை வழங்க, இறுதியில் பானுக ராஜபக்ஷ வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார்.

தனுஷ்க குணதிலக்க 20 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றதுடன், பானுக ராஜபக்ஷ 14 பந்துகளில் 31 ஓட்டங்களையும், வனிந்து ஹஸரங்க 9 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதன்படி இலங்கை அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

சுபர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ள அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளது. அதுமாத்திரமின்றி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய வெற்றியிலக்கையும் இலங்கை அணி பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<

[insert_php] $contents = file_get_contents(“https://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-vs-afghanistan-super-4-n”); echo $contents;[/insert_php]