சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் ரவி அஸ்வின்

60

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழல்வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், குறித்த அணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தினால் கீரின்ஸ் அணிக்கு இலகு வெற்றி

இந்தியாவின் விளையாட்டு இணையதளமான கிரிக்பஸ் (Cricbuzz) வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அஸ்வின், தான் விலகும் விடயத்தினை குறிப்பிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது 

அஸ்வின் விலகுவதற்கான காரணம் சென்னை அணியில் இருந்து விலகும் காரணம் தொடர்பில் தகவல்களை பெற கிரிக்பஸ் இணையதளமானது முயற்சித்த போதும் அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அடுத்த பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் அஸ்வின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது 

சுமார் ஒன்பது ஆண்டு கால இடைவெளியின் பின்னர் தனது தாயகத்தினை பிரதிநிதித்துவம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 2025 IPL தொடருக்காக இந்திய நாணயப்படி 9.75 கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அஸ்வின், அவ்வணிக்காக இறுதிப்பருவத்தில் 9 போட்டிகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<