பெண்களுக்கான உலக குத்துச் சண்டையில் இலங்கையின் அனுஷா

33

சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தினால் 10ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான உலக குத்துச் சண்டைப் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகியது.

72 நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்ற இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 39 வயதுடைய இலங்கையின் அனுபவமிக்க வீராங்கனையான அனூஷா கொடித்துவக்கு பங்குபற்றுகிறார்.

தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு

கடந்த மாதம் நடைபெற்ற க்ளிபர்ட் கிண்ண குத்துச் சண்டை கோதாவில் வெற்றியீட்டிய காரணத்தால் பெண்களுக்கான உலக குத்துச் சண்டை போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான குத்துச் சண்டை 45 – 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டு பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் பதக்கத்தை வென்றுகொடுத்த இலங்கை வீராங்கனையாகவும் இடம்பிடித்த அனூஷா, இவ்வருடம் மொங்கோலியாவில் நடைபெற்ற உலான்பாட்டர் பெண்களுக்கான குத்துச் சண்டை கோதாவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேநேரம், கடந்த ஒரு தசாப்தமாக தேசிய குத்துச் சண்டை நட்சத்திரமாக வலம்வந்து கொண்டிருக்கின்ற அவர், 2006, 2008, 2010, 2012, 2014 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற பெண்களுக்கான உலக குத்துச் சண்டை போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.

இதில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சம்பியன்ஷிப் தொடரில் அவர் 7ஆவது இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஸ்னூகர் சம்பியனாக மகுடம் சூடிய மொஹமட் பாஹிம்

தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக்காலமாக இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற

இந்த நிலையில், பெண்களுக்கான 51 கிலோ கிராம் எடைப் பிரிவு முன்னோடி சுற்றில் சுவீடன் நாட்டு வீராங்கனையான லிசே சண்டேபயரை, முதல் போட்டியில் அனுஷா கொடித்துவக்கு எதிர்த்தாடவுள்ளார்;

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலக குத்துச்சண்டைப்  போட்டியில் சம்பியனாகிய இத்தாலியின் அலிசியா மெசியானோ (பெதர் வெயிட் பிரிவு), 81 கிலோ கிராமுக்கு மேற்பட்டோருக்கான எடைப் பிரிவின் நடப்பு சம்பியன் யாங் ஸியாலி (சீனா), வெள்ளிப்பதக்கம் வென்ற கைய் ஸ்கோட் (அவுஸ்திரேலியா), ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற மிரா போட்கோனென் (பின்லாந்து) மற்றும் முன்னணி நட்சத்திரங்களான பியாம்விலாய் லாபியாம் (தாய்லாந்து) அனஸ்டசியா பெலியக்கோவா (ரஷ்யா), விர்ஜினியா புச்ஸ் (அமெரிக்கா), லின் யு டிங் (சீனதைபே) உள்ளிட்டோர் இம்முறைப் போட்டித் தொடரில் களமிறங்குகின்றனர்.

அத்துடன், பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் 5 முறை உலக சம்பியனான இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க