பிலிப்பைன்ஸில் சாதித்த இலங்கையின் 71 வயது வீராங்கனை

179

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப் தொடரில் (Masters Athletics Championship) பங்கேற்றிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் அகிலா திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலம் வென்று இலங்கைக்கு கௌரவம் சேர்த்துள்ளார். 

மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும் கிரிக்கெட் வீராங்கனை

முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தரான 71 வயது நிரம்பிய அகிலா திருநாயகி குறிப்பிட்ட மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப் தொடரில் 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததோடு, 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஒன்றே வென்றே இலங்கை மண்ணுக்கு கௌரவம் சேர்த்திருக்கின்றார்.

இன்னும் 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்றிருந்த அவர் அதில் நான்காவது இடத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

முல்லைத்தீவின் முள்ளியவளை கிராமத்தினைச் சேர்ந்த அகிலா திருநாயகி, தான் வென்ற பதக்கங்கள் மூலம் இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு மாத்திரமின்றி சாதிப்பதற்கு வயது தடை இல்லை என்பதனையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கின்றார்.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<