இலங்கை – ஆப்கான் T20I தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது

Afghanistan tour of Sri Lanka 2024

302

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட் விற்பனையை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர்  தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஐசிசியின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஷெமார் ஜோசப்

T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.srilankacricket.lk) பெற்றுக்கொள்ள முடியும். 

அதுமாத்திரமின்றி போட்டி நடைபெறாத தினங்களில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஏனைய தினங்களில் கொழும்பு வித்தியா மாவத்தை மற்றும் தம்புள்ள பிரதேச செயலகம் போன்ற இடங்களில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 200 ரூபா முதல் 1000, 1500 மற்றும் 2500 ரூபாவுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டிக்கெட் விலைகள் பின்வருமாறு 

அரங்கம்  விலை 
புற்தரை  200 
அரங்கம் C, D, E, F  1000 
அரங்கம் A மற்றும் B  1500 
கிரேண்ட் ஸ்டேண்ட்  2500 

 
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<