ஆப்கானிஸ்தான் A அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் ஒரு நான்கு நாள் போட்டியில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் A அணி எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதுடன், முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 28ம் திகதி ஆரம்பமாகிறது.
>>இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சகீப்<<
அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 30, மே 3, மே 5 மற்றும் மே 7ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை நான்கு நாள் போட்டி நடைபெறுவுள்ளது.
எவ்வாறாயினும் போட்டிகளுக்கான மைதானங்கள் தொடர்பிலான எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
| திகதி | போட்டிகள் | 
| ஏப்ரல் 28 | முதல் ஒருநாள் | 
| ஏப்ரல் 30 | 2வது ஒருநாள் | 
| மே 3 | 3வது ஒருநாள் | 
| மே 5 | 4வது ஒருநாள் | 
| மே 7 | 5வது ஒருநாள் | 
| மே 11 – 14 | நான்கு நாள் போட்டி | 
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<











