ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ரைசிங் ஸ்டார்ஸ் T20 தொடர் அடுத்த மாதம் 14ஆம் திகதி கட்டார் டோஹாவில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஏற்கனவே நடைபெற்றுவந்த வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் தற்போது ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியின் புதிய பயிற்றுவிப்பாளராகும் நாயர்
இந்த தொடருக்கான குழு மற்றும் போட்டி அட்டவணைகளை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை குழாம் Aயில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணியுடன், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங் கொங் A அணிகள் குழு Aயில் இடம்பெற்றுள்ளதுடன், குழு Bயில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் A அணிகள் குழு Bயில் இடம்பெற்றுள்ளன.
இதில் இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நவம்பர் 15ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளில் ஹொங் கொங் மற்றும் பங்களாதேஷ் அணிகளை முறையே நவம்பர் 17 மற்றும் 19ஆம் திகதிகளில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















